ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களை அதிகம் தாக்குகின்றது கொலஜென் பிரச்சனை

வயது கூடிய தோற்றத்திற்கு கொலஜென் எனும் புரதம் உடைவதும் காரணம் ஆகின்றது. ஏன் இந்த கொலஜென் சருமத்திற்கும், தோற்றத்திற்கும் முக்கியம் ஆகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். கொலஜென் என்பது நமது உடலில் இருக்கும் அதிக புரதம். 70 சதவீதம் சருமம், முடி, நகம் மற்றும் 100 சதவீதம் இணைப்பு தசைகளுக்கு இந்த கொலஜென் புரதமே முக்கியமானதாகின்றது. தலைமுடி முதல் ஒவ்வொரு அங்குல சருமத்திலும், மூட்டு அசைவிலும், உணவு பாதை சீராய் இருப்பதிலும் இப்புரதம் பெரும் பங்கு வகிக்கின்றது.
Colageno
வயது கூடும் பொழுது இந்த கொலஜென் உருவாக்கம் நம் உடலில் குறைகின்றது. வயது 25-ஐ கடக்க ஆரம்பிக்கும் பொழுது உடலில் கொலஜென் அளவு குறையத் தொடங்குகின்றது. இதன் காரணமே உடல், சருமம் இவை முதுமைத் தோற்றத்தினை காட்ட ஆரம்பிக்கின்றன. சத்தமிடும் மூட்டுகள், மெலிந்த முடி, உடையும் நகம், வயிற்றுப் பிரச்சினைகள் ஆகியவை ஏற்படத் தொடங்குகின்றன.

* ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 1.2 சதவீதம் கொலஜென் குறைய ஆரம்பிக்கின்றது.
* அநேகமாக அது 25 வயதிற்கு மேல் ஆரம்பிக்கின்றது.
* இது 40-50 வயதுகளில் அதிகமாகின்றது.
* பொதுவில் ஒரு பெண் 40 வயதில் தன் உடலில் 20 சதவீதம் கொலஜென் இழந்திருப்பாள்.
* இது 50 வயதில் கூடுதலாகத் தெரியும்.
* 80 வயதில் 75 சதவீதம் கொலஜென் குறைந்திருக்கும்.

இதற்கு வயது கூடுவது மட்டுமே காரணம் இல்லை. முறையான உடல் உழைப்பின்மை, எடை அதிகம் போன்றவை கூட காரணம் ஆகின்றது.
மேலும் கொலஜென் வெகு சீக்கிரம் உடலில் குறைவதற்கான கராணங்களாக

* போதிய நேரம் தூக்கமின்மை, * அதிக சர்க்கரை உள்ள உணவு சாப்பிடுதல், * அடிபடுதல், * பலவீன மூட்டுகள், * அதிக கொலஸ்டிரால், * அதிகம் வெய்யிலில் இருத்தல், * நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத உணவு, * நாள் முழுவதும் அமர்ந்தே இருப்பது, * உணவுப் பாதை பாதிப்பு, * வைட்டமின் சி, ஸிங்க குறைபாடு ஆகியவைகளும் ஆகும்.

வைட்டமின் சி சத்து நிறைந்த உணவு, பூண்டு, வெங்காயம், மஞ்சள், கிரீன் டீ போன்றவை கொலஜென் பாதுகாப்பிற்கு உதவுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவரது உடலின் நோய் எதிர்ப்பு பகுதியே அவரது உடலின் ஆரோக்கியமான திசுக்களை அழிப்பதே இந்த நோயாகும். கடுமையான சுயபாதிப்பு உடன் இணைந்த திசு குறைபாடு ஆகும். இது உடலின் எந்த பாகத்தினையும் பாதிக்கக் கூடும். மூட்டு, சருமம், சிறுநீரகம், ரத்த அணுக்கள், இருதயம், மூளை என எந்த பாகத்தினையும் பாதிக்கக் கூடும்.

15-45 வயதிற்குட்பட்டவரை அதிகமாய் இந்நோய் பாதிக்கின்றது. குறிப்பாக பெண்களை அதிகம் தாக்குகின்றது. இந்நோய் தாக்கத்திற்கான காரணங்கள் இன்னமும் ஆய்வு நிலையில் தொடர்ந்து இருக்கின்றது. பரம்பரை, ஹார்மோன்கள், சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவைகள் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இந்த பாதிப்பினை அடையும் 10 பேரில் 9 பேர் பெண்களாக இருக்கின்றனர். பாதிப்புடைய பெண்கள் மாதவிடாய் முன்பு, கர்ப்பகாலம் ஆகிய நேரங்களில் இந்த பாதிப்பினை அதிகம் அடைகின்றனர்.
* அதிக ஒளி, * சில வகை கிருமிகள், வைரஸ், * அதிக மனஉளைச்சல், * சில வகை மருந்துகள், * சில காயங்கள் போன்றவையும் பாதிப்பிற்கு காரணங்கள் ஆகின்றன.
நோயின் அறிகுறிகள்.

இதன் அறிகுறிகள் மற்ற சில நோய்களின் அறிகுறிகள் போலும் இருக்கும்.

* பூச்சி வடிவில் உடலில் திட்டுகள், கன்னத்தில் மற்றும் மூக்கில் இருக்கும்,
* அதிக சோர்வு,
* மிகவும் வீங்கிய மூட்டுகள்,
* முடி கொட்டுதல்,
* அடிக்கடி ஜீரம்,
* வெய்யிலில் சென்றாலே சரும பாதிப்பு அதிகரித்தல்,
* அதிக மனஉளைச்சல், குளிர் இருக்கும் பொழுது கை, கால் விரல்கள் வெளுப்பது  (அ) வெளிர் நீலம் ஆவது,
* ஆழ்ந்த மூச்சு விடும் பொழுது நெஞ்சுவலிப்பது,
* வறண்டவாய், வறண்ட கண்கள்,
* பசியின்மை, வயிற்றுப் பிரட்டல், வாந்தி

ஆகியவை இருக்கும். மருத்துவர் ஆலோசனையும், மருத்துவ சிகிச்சையே இதற்கு தீர்வாக அமையும். உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் உங்களைப் பற்றி சொல்லி விடும்.

நமது மரபணுக்கள் நம் உடல் நலத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் உங்கள் உடல் நலத்தோடு சம்பந்தப்பட்டது. அவற்றில் சிலவற்றினை பார்ப்போம்.

முகப்பருக்கள்: அநேகர் இதன் தாக்குதலால் கஷ்டப்படுகின்றனர். உங்கள் பெற்றோருக்கு இருக்கின்றதா? உங்கள் சரும பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். சிறிய பாதிப்பு ஏற்படும் பொழுதே சரும நிபுணரின் ஆலோசனைப் பெறுங்கள்.

* பல் சொத்தை,
* பெரிய மருத்துவ காரணமின்றி மனஉளைச்சல் ஏற்படும் பொழுது மயங்குதல்,
* நெஞ்செரிச்சல்,
* படிப்பதில் சில குறைபாடுகள்,
* அலர்ஜி,
* அடிக்கடி தலைவலி (மைக்ரேன்),
* ஈறுகளில் ரத்த கசிவு,
* எடை,
* நீரிழவு நோய்,
* மனச்சோர்வு,
* கர்ப்ப காலத்தில் சில பிரச்சினைகள்,
* அதிக மது பழக்கம்,
* இரட்டை குழந்தை,
* இருதய பாதிப்பு,
* வெகு சீக்கிரம் மாத விடாய் நிற்பது,
* ஆஸ்துமா,
* உணவுக் குழாய் பாதிப்பு,
* அதிக கொழுப்பு,
* மார்பக புற்றுநோய்.

இவையெல்லாம் பெற்றோருக்கும் மற்றும் தாத்தா, பாட்டிக்கு இருந்ததென்றால் அவர்களது வாரிசுகளும் மேற்கூறியவற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button