தலைமுடி சிகிச்சை

வழுக்கை விழுவதை தடுக்க எலுமிச்சை சாறு!சூப்பர் டிப்ஸ்

முடி உதிர்வது சாதாரணம் தான் என்றாலும் கூட அளவுக்கு அதிகமான முடி உதிர்வு என்பது கூந்தலின் அடர்த்தியை குறைத்துவிடும்.

1 lemon olive oil 17 1479359944எனவே முடி உதிரும் காலத்திலேயே கீழே கொடுக்கப்பட்டுள்ள மிக எளிமையான முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்.

ஆலிவ் ஆயில்

ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறை 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் கலந்து முடியின் வேர்க்கால்களில் நன்றாக மசாஜ் செய்து இதனை 40 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்தால் முடி உதிர்வை தடுக்கலாம்.

விளக்கெண்ணெய்

2 டீஸ்பூன் அளவு விளக்கெண்ணையையுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறையும் கலந்து கூந்தலில் நன்றாக தடவி மசாஜ் செய்து இதனை அப்படியே 20 முதல் 30 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்வதால் தலைமுடி உதிர்தல் பிரச்சனை வரவே வராது.

வெங்காயச்சாறு

இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெங்காய சாறை எடுத்து இந்த இரண்டு கலவையும் தலைமுடியில் போட்டு நன்றாக மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்புவினால் கழுவ வேண்டும். இதனை மாதத்தில் ஒரு முறை செய்வதால் முடி உதிர்வு நிறுத்தப்படும்.

தேங்காய் எண்ணெய்

மாதத்திற்கு ஒருமுறை பூண்டை நன்றாக மசித்துக் கொண்டு அதனுடன் மூன்று டேபிள் ஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய்யை மற்றும் எலுமிச்சை சாறையும் சேர்த்து அதை கொண்டு கூந்தலின் வேர்க்கால்களை நன்றாக மசாஜ் செய்து பின் முப்பது நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.

தயிர்

2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் 1 டீஸ்பூன் அளவு யோகார்ட்டை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து அதனை தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து அலச வேண்டும்.

கற்றாழை ஜெல்

2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகிய இரண்டையும் நன்றாக கலந்து அந்த கலவையை நன்றாக முடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்து இருபது நிமிடங்கள் இதனை அப்படியே விட்டுவிட வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தடவைகள் செய்வதன் மூலமாக தலைமுடி உதிர்வு பிரச்சனை தீரும்.

இளநீர்

இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறும் மூன்று டீஸ்பூன் இளநீரையும் எடுத்துக் கொண்டு தலைமுடிக்கு ஷாம்பு போட்ட பின்னர், இந்த கலவையை கூந்தலில் தடவி 5 நிமிடங்கள் கழித்து கூந்தலை அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் அலச வேண்டும்.

நெல்லிக்காய்

இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்து அதனுடன் மூன்று டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் எண்ணெய்யுடன் கலந்து கொண்டு இதனை தலைமுடியின் வேர்க்கால்களில் தடவி நன்றாக மசாஜ் செய்தால் முடி உதிர்வு பிரச்சனையானது குறையும்.

மருதாணி

மருதாணி பௌடரில் 2-3 டீஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறை கலந்து அதனை தலையில் போட்டு 30 நிமிடங்கள் கழித்துதலையை நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். இதனை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

il 17 1479359944

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button