முகப் பராமரிப்பு

நீண்ட நாட்கள் இளமையாக இருக்கணுமா..?அப்ப இத படிங்க!

முகத்தின் முழு அழகையும் நாம் பராமரிப்பது மிக அவசியமாகும். இதற்காக பல வகையான வேதி பொருட்களை முகத்தில் வாங்கி பூசி கொள்ள தேவை இல்லை. மாறாக நம் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே நாம் அழகு பெறலாம். அந்த வகையில் பப்பாளி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பப்பாளியில் பல வகையான ஊட்டசத்துக்களும், தாதுக்களும் உள்ளன.

நம்மில் பலர் பப்பாளி பழத்தை மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால், இதன் விதைகளிலும் ஏரளமான ஆரோக்கிய ரசககியங்கள் உள்ளன. குறிப்பாக இவை முக அழகை இரு மடங்காக அழகு பெற செய்யுமாம். எவ்வாறு பப்பாளி விதையை பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் அறிவோம்.

பப்பாளியும் அழகும்..!

மிக முக்கியமான பழங்களில் இந்த பப்பாளியும் ஒன்று. இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் இந்த பப்பாளியை சாப்பிட்டு வந்தாலே போதும். பப்பாளியை பல்வேறு வகையில் நாம் பயன்படுத்தலாம். அதே போன்று இதன் விதைகளையும் நாம் அழகியல் முறைக்கு உபயோகித்து கொள்ளலாம்.

சத்துக்கள் கொண்ட பப்பாளி…

கார்பைன் (karpain) என்ற மூல பொருட்கள் இதில் உள்ளதால், நுண்ணுயிரிகளை முகத்தில் வராமல் காக்கும்.மேலும், முக அழகை மேம்படுத்தும் பல ஊட்டசத்துகளும் தாதுக்களும் இதில் உள்ளன.

கால்சியம் வைட்டமின் சி மெக்னீசியம் வைட்டமின் எ பொட்டாசியம் வைட்டமின் டி செலினியம் பிளவனோய்ட்ஸ்

கருமை நீங்க

முகம் கருப்பாக இருக்கிறதேன்னு கவலை நம்மில் பலருக்கு இருக்கும். முகத்தில் உள்ள கருமை நிறத்தின் போக்க ஒரு அற்புத வழி இருக்கிறது. இந்த அழகு குறிப்பு கருமை முகத்தை வெண்மையாக மாற்றும்.

தேவையானவை :- பழுத்த பப்பாளி 1 ஸ்பூன் பப்பாளி விதை 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன் வைட்டமின் சி கேப்ஸுல்ஸ்

செய்முறை :- முதலில் பப்பாளியையும் அதன் விதைகளையும் நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அவற்றுடன் தேன், விடமிவ் சி கேப்சியூல் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போல போட்டு கொள்ளவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இறுதியாக தேங்காய் எண்ணெய்யை முகத்தில் பூசி மாஸ்ஜ் செய்து, சிறிது நேரத்திற்கு பின் கழுவவும்.

பருக்களை நீக்க முகத்தில் உள்ள பருக்களை நீக்க பப்பாளி விதையே போதும். முகத்தில் அதிக படியான எண்ணெய் சுரந்து முக பருக்களை உருவாக்குகிறது. இவற்றை நீக்க…

தேவையானவை :- பப்பாளி விதை 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

செய்முறை :- பப்பாளி விதைகளை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து கொண்டு முகத்தில் உள்ள பருக்கள் இருக்கும் இடத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். மேலும், பப்பாளி விதையில் வைட்டமின் எ உள்ளதால் முகம் பொலிவும் பெறும்.

முகம் மினுமினுக்க… முகத்தை மினுமினுப்பாக மாற்ற நாம் பல்வேறு கிரீம்களை பயன்படுத்தி இருப்போம். இவை முற்றிலும் முகத்தை கெடுத்து விடும். ஆனால், இந்த பப்பாளி விதையை கொண்டு செய்யப்படும் இந்த குறிப்பு முகத்தை பளபளப்பாக்கும்.

தேவையானவை :- பப்பாளி விதை எண்ணெய் 2 ஸ்பூன் எலுமிச்சை எண்ணெய் 1 ஸ்பூன் கேரட் எண்ணெய் 1 ஸ்பூன்

செய்முறை :– முகத்தை மினுமினுப்பாக வைத்து கொள்ள, இந்த மூன்று எண்ணெய்களையும் ஒன்று சேர்த்து கொண்டு நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அடுத்து இவற்றை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் மினுமினுப்பாகும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வரலாம்.

நீண்ட இளமை பெற இளம் வயதிலே முகத்தில் சுருக்கங்கள் விழுந்து வயதானவரை போன்ற தோற்றம் கொண்டுள்ளீர்களா…? இனி இந்த கவலையை விட்டு தள்ளுங்கள். இதற்கு இந்த முறை உதவும்.

தேவையானவை :- பப்பாளி விதை 1 ஸ்பூன் கடலை மாவு 1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன்

செய்முறை :- முதலில் பப்பாளி விதைகளை கடலை மாவுடன் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இந்த கலவையுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இவற்றை முகத்தில் தடவி மெல்லமாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தின் சுருக்கங்கள் மறைந்து போகும். மேலும், இளமையான சருமத்தையும் நீங்கள் பெறுவீர்கள். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.

538653440

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button