மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கர்ப்ப காலத்தில் மல்லாந்து படுத்தால் ஏற்படும் பிரச்சனைகள்

குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கக்கூடாது பக்கவாட்டில் தான் படுக்கவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? இதோ சில உண்மைகள்..!

கர்ப்ப காலத்தில் மல்லாந்து படுத்தால் ஏற்படும் பிரச்சனைகள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. பக்கவாட்டில் தான் தூங்கவேண்டும் என்பது தான் அது. இது பற்றி அறிவியல் என்ன கூறுகிறது

* முதல் மூன்று மாதங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 4 ஆம் மாதத்தில் இருந்து தாய்க்கும் சேய்க்கும் தொப்புள் கொடி வலிமை பெற்று இருக்கும்.

* மல்லாந்து படுத்தால், கருப்பையில் இருக்கும் நீரில் மிதந்துக்கொண்டிருக்கும் தொப்புள் கொடி கருவின் மீது சுற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

* 4 மாதங்களுக்கு பிறகு குழந்தையின் எடை கூடும் நிலையில் மல்லாந்து பார்த்தபடி படுத்தால் தாயின் குடல் மீது அழுத்தத்தை கொடுக்கும். இதனால் அஜீரணம் ஏற்படும். அசவுகரியமாக உணர்வார்கள்.

* அதிக எடை வயிற்று பகுதியில் இருக்கும் நிலையில் மேல் பார்த்தபடி படுத்தால் இடுப்பு மற்றும் முதுகு எலும்பிலும் அழுத்தம் ஏற்படும். இதனால் தாயின் உடலில் ரத்த ஓட்டமும் பாதிக்கும்.

* தாய் பக்கவாட்டில் படுத்திருக்கும் போது வயிற்றில் வளரும் குழந்தை அசைந்து விளையாடும். நடமாடும் போது, அசைவின்றி இருக்கும். இது ஏனென்றால், பக்கவாட்டில் படுத்திருக்கும் போது குழந்தை விளையாட அதிக இடம் கிடைக்கும். நின்றுக்கொண்டிருக்கும் போதும், மேல்நோக்கி பார்த்தபடி படுத்திருக்கும் போதும் கருப்பை சுருங்கி இடுப்பு எலும்பில் தாங்கியபடி இருக்கும். (தண்ணீர் பலூனின் இயல்பை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்).

அதனால் கர்ப்பிணிகள் பக்கவாட்டில் படுத்து உறங்குவது தாயுக்கும் சேய்க்கும் மிகவும் நல்லது.Best Sleep Positions During Pregnancy1. L

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button