முகப் பராமரிப்பு

ஆர்கானிக் ஃபேஷியல் இவ்வளவு நன்மைகளா?

நீங்கள் இயற்கைப் பிரியரா? ரசாயனக் கலப்பற்ற பொருட்களையே பயன்படுத்த நினைப்பவரா? இதோ உங்களுக்காகவே இருக்கிறது  ஆர்கானிக் ஃபேஷியல். பரிசுத்தமான இயற்கைப் பொருட்களில் தயாரான முகப் பூச்சுக்களைக் கொண்டு முகத்தை கூடுதல் பொலிவுறச்  செய்வதே ஆர்கானிக் ஃபேஷியல். இது தோலிற்கு எந்தவித பக்கவிளைவும் ஆற்றாது. தோல் பளிச்சென்று கூடுதல் மினுமினுப்புடன்,  பொலிவும் அழகும் கிடைக்கும். இந்த புராடெக்டுகள் கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்துதல், வாசனைக்காக செயற்கை ரசாயனங்களை  இணைத்தல் என எந்தக் கலப்படமும் இதில் இருக்காது. ஆர்கானிக் ஃபேஷியல் மூலம் கிடைக்கும் பளபளப்பும், பொலிவும் குறைவான  நாட்களே இருக்கும் என்றாலும், இயல்பான ஆன்டி ஆக்சிடென்ட், தோலிற்குத் தேவையான நியூட்ரியன்ஸ், விட்டமின்ஸ், மினரல்ஸ்  போன்றவை இதில் நிறைந்திருக்கும்.

பார்லர்களில் செய்யப்படும் மற்ற ஃபேஷியல் போலவே ஆர்கானிக் ஃபேஷியலிலும் கிளென்சிங், ஸ்கரப், மசாஜ் க்ரீம், மாஸ்க், சீரம் என  அதே மாதிரியான வழிமுறைகளே இவற்றிலும் பின்பற்றப்படும். ஆர்கானிக் ஃபேஷியல்களை பார்லரில் ப்யூட்டிசியன் விஜி செய்து  காட்டுவதுடன், அதன் சிறப்பை விளக்குகிறார் அழகுக் கலை நிபுணர் ஹேமலதா.

தேவையான பொருட்கள்

* க்ளென்சிங்
* ஸ்க்ரப்
* மசாஜ் க்ரீம்
* மாஸ்க்
* சீரம்.

(ஆர்கானிக் பொருட்களால் தயாரான இவை ஜெல், பவுடர், லோஷன், மில்க் என பல வடிவில் சாஷேக்களில் வருகிறது.)103620432 gettyimages 967002286 7

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button