முகப் பராமரிப்பு

நீங்கள் என்றுமே இளமையாக இருக்கணுமா..? அப்ப இத படிங்க!

நீண்ட நாள் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இருக்காது. என்றுமே சாகா வரம் பெறுவது போல, என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்ற வரத்தையும் பலர் பெற துடிப்பதுண்டு. உண்மையில் இதை பற்றிய பல வகையான ஆராய்ச்சிகள் இன்றளவும் சென்று கொண்டிருக்கின்றன. முகத்தை பொலிவாக இளமையாக வைத்து கொள்ள பலவகையான மருந்துகளை நாம் பயன்படுத்த வேண்டியதில்லை.

இந்த சிறிய பழம் ஒன்றே போதும். அது என்ன பழம்னு யோசிக்கிறீங்களா..? அதுதான் அப்ரிகாட் பழம். இந்த பழத்தை வைத்து பல வகையான வித்தைகளை நாம் செய்யலாம். அவை என்ன என்பதை இனி அறிந்து கொள்வோம்.

அரிய வகை பழம்…

நம் ஊரில் பல வித பழங்கள் உள்ளன. அவற்றில் சில முக்கியமான பழங்கள் உடல் மற்றும் முகத்தின் ஆரோக்கியத்தை பெரிதும் காக்கும். அந்த வகையில் இந்த அப்ரிகாட் பழமும் அடங்கும். இதில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. இனிப்பு மற்றும் சிறிது புளிப்பு சுவையை கொண்ட இதை சாப்பிடவும் செய்யலாம், அதே போல முகத்திற்கும் பயன்படுத்தலாம்.

அற்புத பழம்…
இதில் ஏராளமான அளவில் ஊட்டசத்துக்கள் இருக்கின்றன. அதனால் தான் இந்த பழம் சாப்பிட மிகவும் உகந்தது. இதில் உள்ள சத்துக்கள் மற்றும் தாதுக்கள்…

வைட்டமின் எ 60%

கால்சியம் 20 mg

பாஸ்பரஸ் 16mg

பொட்டாசியம் 40mg

வைட்டமின் சி 26%

சோடியம் 2mg

சருமத்தை சுத்தம் செய்ய… முகத்தின் அழகு என்பது முகத்தின் சுத்தத்தை பொறுத்தே அமையும். முகமானது, அழுக்குகள் நீங்கி சுத்தமாக இருந்தால் எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கும். முகத்தின் அழுக்குகளை நீக்க இந்த குறிப்பு உதவும்.

தேவையானவை :- பாதாம் எண்ணெய் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் அப்ரிகாட் விதை எண்ணெய் 1 ஸ்பூன் சர்க்கரை 1 ஸ்பூன்

செய்முறை :- முதலில் அப்ரிகாட் எண்ணெயை சர்க்கரையுடன் கலந்து முகத்தில் தடவவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தின் அடி தோலில் உள்ள அழுக்குகள் நீங்கும். பிறகு ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதம் எண்ணெய் சேர்த்து மறுபடியும் முகத்தில் மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதால் முகம் விரைவில் அழுக்குகள் நீங்கி பொலிவு பெறும்.

இளமையான முகத்திற்கு முகம் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இருக்காது. முக அழகையும், இளமையையும் இரட்டிப்பாக்கும் தன்மை வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் இ- க்கு உள்ளது. இதனை அடைய..

தேவையானவை :- அப்ரிகாட் எண்ணெய் 1 ஸ்பூன் லாவண்டர் எண்ணெய் 1 ஸ்பூன் எலுமிச்சை எண்ணெய் 1 ஸ்பூன்

செய்முறை :- முதலில் அப்ரிகாட் எண்ணெய்யை முகத்தில் தடவி கொள்ளவும். 15 நிமிடம் கழித்து இதனை காட்டன் துணியால் துடைத்து எடுத்து விடவும். பிறகு மேற்சொன்ன மூன்று எண்ணெய்யையும் ஒன்றாக சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு ஒரு நாளைக்கு இருமுறை செய்து வந்தால் இளமையான முகத்தை பெறலாம்.

முடி பிரச்சினைக்கு… முடி பிரச்சினைகளை சரி செய்ய பல வகையான வழிகள் இருந்தாலும் இந்த அப்ரிகாட் எண்ணெய் முறை நன்கு உதவும். இந்த குறிப்பை வாரத்திற்கு ஒரு செய்து வந்தாலே போதும்.

தேவையானவை :- பாதாம் எண்ணெய் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்

செய்முறை :- முதலில் இந்த மூன்று எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பிறகு, இதனை முடியின் அடி வேரில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் பாதிப்படைந்த முடிகளும், பொடுகு தொல்லையும், முடி உதிர்வு பிரச்சினையும் குணமாகும்.

ஈரப்பதமான முகத்திற்கு முகத்தை வறட்சியாக வைத்திருந்தால் பலவகையான பிரச்சினைகள் முகத்திற்கு வரும். எனவே, முகத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளுங்கள். இதற்கு அப்ரிகாட் எண்ணெய்யே போதும். முகம், கால், கை ஆகிய இடத்தில் இந்த எண்ணெய்யை தேய்த்து வந்தால் சருமம் பொலிவுடன் இருக்கும். இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.

1539346623

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button