அழகு குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் தங்கள் சருமத்தை பராமரித்து கொள்வது எப்படி? இதோ எளிய குறிப்புகள்

ஆண்களின் லைப்ஸ்டைல் பெண்களை காட்டிலும் வெகுவாக மாறுபட்டது. இதில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை காண்பது மிகக் கடினமான ஒன்று.

அழகு பராமரிப்பு உணர்ச்சியை ஆண்கள் மற்றவர்களுக்காக மறைத்து, செய்துக் கொள்வதற்கு வெட்கபட வேண்டிய அவசியம் இல்லை.

ஆண்கள் எப்படி தங்கள் அழகை பராமரிப்பது என்று கேட்குறீர்களா? இதோ, ஆண்களுக்கான சில எளிய அழகுக்குறிப்புகள்

  • பெண்களை விட ஆண்களின் சருமம் அதிக எண்ணெய் சுரக்கும் தன்மை கொண்டது. இதனால் தான் ஆண்களின் முகத்தில் எண்ணெய் வழிந்த வண்ணம் இருக்கும். இதற்கு சரியான தீர்வு கிரீம் அல்ல, ஜெல் பயன்படுத்துவது தான். ஜெல் பயன்படுத்துவதினால், பிக்மென்டேசன் மாசு மருக்களையும் கட்டுப்படுத்தலாம்.
  • முகத்தில் ஷேவ் தொடர்ந்து செய்வதினால் சருமம் கடினமாக மாறிவிடும். இதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. ஷேவ் செய்தப்பின் தேங்காய் எண்ணெய் அல்லது தூய பாதாம் எண்ணெயை தேய்தால் சருமம் மென்மையாகவே இருக்கும்.
  • கணினி வேலை செய்பவர்களுக்கும், அதிக படியான மனஅழுத்தம் கொண்டவர்களுக்கும் கண்களின் கீழ் பை போன்று வருவதுண்டு. வெள்ளரிக்காயில் தேன் தடவி கண்கள் மீது வைத்து கட்டிக்கொள்ளுங்கள். மாறாக பயன்படுத்திய டீ பேக்-களை பயன்படுத்தலாம். 10 நிமிடம் கழித்து கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுங்கள். சில நாட்களில் மாற்றம் தெரியும்.
  • பெண்களை மட்டும் இல்லை, ஆண்களையும் விட்டு வைப்பதில்லை இந்த வெப்பம். சீக்கிரம் கருத்துவிடும் சருமத்தை காப்பாற்ற ஆண்களும் சன் லோஷனை தேவைப்படுகிறது. அதிக SPF உடைய சன் லோஷனை பயன்படுத்துவது நல்லது.
  • ஆண்களின் சருமத்திற்கும் ஈரபதம் மிக அவசியம் என்பதை மறக்கவேண்டாம். ஈரப்பதத்தை இழக்கும் சருமமானது வறண்டு, வெடிப்பு விட்டு, காய்ந்த திட்டுகளாக தென்படும். அதற்கு நீர் அதிகமாக அருந்துங்கள், அவ்வப்போது சோப்பு இல்லாமல் வெறும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவுங்கள்.mens beauty tips. L styvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button