பொட்டு!!

இன்றைய காலகட்டத்தில் பொட்டு ஒரு அழகு பொருளாக மாறி வருகிறது. அன்று ஒரு குங்கும பொட்டும் அல்லது சாந்து பொட்டு வைப்பாங்க. அது மழையில், வியர்வையில் அழிந்துவிடுவதால் கொஞ்சம் மாற்றி அது ஸ்டிக்கர் பொட்டாச்சு.

Bindi-jpg-957
ஸ்டிக்கர் பொட்டு ஆடைகளுக்கு தகுந்தது போல் கலர் கலராகவும் பல டிசைன்களிலும் வருகிறது. வட்டமாக பொட்டு வந்தது போக இன்று பாம்பு, மனித உருவம், பூக்கள், பிறை, நிலா, கல் வைத்த பொட்டு என்று நிறையவிதங்களில் கிடைக்கிறது..

பேஷனுக்கு தகுந்த படி பலவிதங்களில் இன்று பொட்டும் கிடைக்கிறது.

பொட்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

அகலமான நெற்றியினைக் கொண்ட பெண்கள், பெரிய பொட்டினை வைத்தால் நெற்றியில் அளவு சிறிதாக தெரிந்து அழகாக இருக்கும்.

சிறிய நெற்றியினை இரண்டு புறுவங்களுக்கும் நடுவில் சின்ன பொட்டு வைத்தால் அழகாக இருக்கும்.

வட்டமுகம் உள்ளவர்கள் கொஞ்சம் பெரிய பொட்டு வைத்தால் அழகாக இருக்கும்.

மாடல் டிரெஸ் போடும் பெண்கள் பொட்டு வைக்காமல் இருப்பதும் தனி அழகு தான்.

கோயிலுக்கு, போகும் பொழுது சாந்து பொட்டு, குங்குமம், விபூதி, சந்தன பொட்டு என்று வைக்கலாம்.

கல்யாண விஷேசங்களுக்கு போகும் பொழுது நல்ல க்ராண்டான கல் வைத்த பொட்டு வைக்கலாம்.

கல்யாண பெண் கல் பொட்டு வைத்தால் விடியோவில் சரியாக தெரியாது.ஆகையால் சாதாரண ஸ்டிக்கர் பொட்டு வைக்கலாம்

Leave a Reply