அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

பாத அழுத்த சிகிச்சை பறந்து போகுமே உடல் வலிகள் !

p51aமன அழுத்தம், ரத்த அழுத்தம், முதுகு வலி, கால் வலி, கழுத்து வலி, மூட்டு வலி என, உடலின் எந்தப் பகுதியில் வலி இருந்தாலும், பாத அழுத்த சிகிச்சையின் (Foot reflexology) மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

நம் பாதம் பல நரம்புகள் சந்திக்கும் இடம். ஒவ்வொரு நரம்பும் ஒவ்வோர் உறுப்புடன் சம்பந்தப்பட்டிருக்கும். அந்தந்த நரம்புகளுக்கு அழுத்தம்கொடுத்து, ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தி, மன அழுத்தம், ரத்த அழுத்தம் மற்றும் வலிகளை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

சிகிச்சையில், முதலில் பாதங்கள் இளஞ்சூடான நீர் விட்டுக் கழுவப்படும். ஒவ்வொரு காலாகத்தான் சிகிச்சை தர முடியும். எனவே, ஒரு காலில் சிகிச்சை தரும்போது, சருமம் வறண்டுபோகாமல் இருக்க, மறுகாலில் துணிகொண்டு இறுக்கமாகக் கட்டிவிடுவோம். அழுத்தம் கொடுக்கும்போது பாதம் மென்மையாக இருப்பதற்காக, பிரத்யேக கிரீமைத் தடவி, பாதங்களில் இருக்கும் நரம்புகளுக்குக் கை விரல்கள் மூலம் அழுத்தம் கொடுக்கப்படும்.

ஒவ்வொரு பாத நரம்புக்கும் கை விரல்களை ஒவ்வொரு விதமாக மடக்கி, அழுத்தம் தரப்படும். நரம்புகளுக்குத் தொடர்ந்து அழுத்தம் தருவதால், எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்து, உறுப்புகள் முழுத்திறனுடன் இயங்க உதவும். சிகிச்சையின்போதே, நம் உடலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய்வதையும், மனம் லேசாவதையும் உணரலாம்.

கால்களில் இருக்கும் நரம்புகளில் அதிக அழுத்தம் கொடுக்கும்போது அது கால்கள் வழியாக அதனுடன் இணைந்திருக்கும் உறுப்புக்கு  ரத்த ஓட்டத்தை அதிகம் பாய்ச்சி அந்த உறுப்பைப் பரவசமடையவைக்கும். சிகிச்சையின்போது சுரக்கும் என்டோர்பின்ஸ் (endorphins) என்னும் வேதிப் பொருள் மன அழுத்தையும், உடல் வலியையும் குறைக்கும்.

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காந்து வேலை செய்பவர்கள் அனைவரும், இந்த சிகிச்சையை அவசியம் எடுத்துக்கொள்வது நல்லது. 30 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை சிகிச்சை அளிக்கப்படும்.
யாரெல்லாம் சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூடாது?

காய்ச்சல், ரத்தப் போக்கு, ரத்தக் கட்டிகளால் பிரச்னை உள்ளவர்களும், குழந்தை கருவாகி, மூன்று மாதங்கள் முடிவடையாதவர்களும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளக் கூடாது. வேறு எதாவது வியாதி, உடல் உபாதைகள் இருந்தால் முன்னரே தெரிவித்துவிட வேண்டும்.

சிகிச்சைக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே உணவு அருந்திவிட வேண்டும்.

‘தடம்’ பதித்த சிகிச்சை!

அக்குப்ரஷர் போன்ற இந்த சிகிச்சை முறை, சீனாவில்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சையில் எந்தக் கருவிகளோ, மருந்து, மாத்திரைகளோ பயன்படுத்துவது இல்லை. வெறும் கைகளைக்கொண்டே சிகிச்சை தரப்படும். சிங்கப்பூரில், இந்த சிகிச்சை முறை மிகவும் பிரபலம்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button