அழகு குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா கற்பூரத்தை கொண்டு கை கால் முட்டிகளில் அசிங்கமாக இருக்கும் கருமையை போக்குவது எப்படி!

கைகால்களில் உள்ள சொரசொரப்பு அழகை கெடுக்கும் விதமாக இருக்கும். இறந்த செல்களின் தேக்கம்தான் அந்த இடங்களில் கடினமான தோலை கொடுத்துவிடுகிறது. அங்கே அழுக்குகள் மேலும் சேர்ந்து பார்க்கவே அழகற்றதாக்கிவிடுகிறது.

நேரமில்லையென்றாலும் தினமும் குறைந்த பட்சம் குளிக்கும்போது முட்டிகளில் தேய்த்து குளிக்கவேண்டும்,. அதோடு வாரம் ஒருமுறை அல்லது இருமுறை கீழ்கண்ட குறிப்புகளை பயன்படுத்தினால் வெகுவிரைவில் முட்டிகள் மென்மை பெற்று மிருதுவாகும்

கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தைப் போட்டு, அந்த எண்ணெயைக் கொண்டு முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி வர, அப்பகுதிகளில் உள்ள கருமை விரைவில் அகலும். சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, அக்கலவையைக் கொண்டு முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி மென்மையாக வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.

கற்றாழை : கற்றாழை ஜெல்லை தினமும் கருமையாக உள்ள முழங்கை மற்றும் முழங்காலில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என தினமும் பின்பற்றி வந்தால், விரைவில் கருமையைப் போக்கலாம்.

கடலை மாவு மற்றும் எலுமிச்சை : 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள முழங்கை மற்றும் முழங்காலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை கருமையை எளிதில் போக்கும் மற்றும் கடலை மாவு இறந்த செல்களை வெளியேற்றும்.

சமையல் சோடா : பேக்கிங் சோடாவைக் கொண்டு ஸ்கரப் செய்தால், இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, கருமை மெதுவாக மறைய ஆரம்பிக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ, இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

தயிர் மற்றும் வினிகர் : தயிர் மற்றும் வினிகரை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ, இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

புதினா : புதினா மற்றொரு பிரபலமான முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள கருமையைப் போக்க உதவும் பொருள். மேலும் புதினாவில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை இருப்பதால், அது இறந்த செல்களை முற்றிலும் வெளியேற்றி, முழங்கை மற்றும் முழங்கால்களின் நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.2018 10 09 at 23 39 12

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button