சூடான சாதத்தில் மாசி கருவாட்டு தொக்கு போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மாசி – 1 துண்டு (25 கிராம்) பெரிய வெங்காயம் – 100 கிராம் பழுத்த தக்காளி – 100 கிராம் பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் எண்ணெய் – ஒரு குழிகரண்டி கடுகு, உளுந்து – தலா அரைடீஸ்பூன் கொத்தமல்லி கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவைக்கு
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு பொரிந்து வந்ததும் வெங்காயம் சோத்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி போல் வந்ததும் மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி வெந்ததும் மாசித்தூள் மற்றும் அரை டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து பிரட்டவும். உப்பு சரி பார்த்துக்கொண்டு ஒரு சேர தொக்குபக்குவம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.