ஆரோக்கியம்உடல் பயிற்சி

உயர் ரத்த அழுத்தம், இருதய பக்க கோளாறுகள், தூக்கமின்மைக்கு பயனுள்ள பயிற்சி யோக நித்திரை

பெயர்விளக்கம்: யோக நித்திரை என்றால் உடலைப் பற்றிய உணர்வு இல்லாமல் தன்னிலையில் இருப்பதே யோக நித்திரை (அரிதுயில்)

செய்முறை: சவாகனம் செய்யவும். கீழ்க்கண்ட முறைப்படி காலிலிருந்து தலை வரை உடலின் ஒவ்வொரு பகுதியாக மனதால் நினைக்கவும். காலின் இரு பெருவிரல்கள் முதல் காலின் சிறு விரல்கள் வரை இரண்டு கால்களின் ஒவ்வொரு விரல்களாக முதலில் மனதால் நினைக்கவும், அடுத்து உள்ளங்கால்கள், குதிகால்கள், கணுக்கால்கள், பாதம் முதல் முழங்காலின் கீழ்வரை முழங்கால்கள், தொடைகள், தொடைகளின் சந்து, இடுப்பு, அடிவயிறு, மேல் வயிறு, மார்பக கழுத்து, தாடை, உதடுகள், பற்கள், நாக்கு, மூக்கு, கன்னம், கண்கள், புருவங்கள், நெற்றி, தலையின் மேல்பாகம், தலையின் பின்பக்கம், காதுகள், கழுத்தின் பின்பாகம், புஜங்கள், இரு கைகளின் அக்குள் பகுதி, இரு கைகளின் கட்டை விரல்கள், ஆள் காட்டி விரல்கள், நடு விரல்கள், மோதிர விரல்கள், சிறு விரல்கள், உள்ளங்கைகள், மணிக்கட்டுகள், கைவிரல்களில் இருந்து முழங்கைகள் கீழ்வரை, முழங்கைகள், புஜங்கள் வரை ஒவ்வொன்றாக மனதால் நினைத்துப் பார்க்கவும். அடுத்து தலை பின் பாகம், கழுத்தின் பின் பாகம், முதுகு, முதுகின் கீழ்பாகம், இடுப்பு, பிருஷ்ட பாகம், தொடைகளின் பின் பாகம், முழங்கால்களின் பின் பாகம், அங்கிருந்து உள்ளங்கால்கள் வரை ஒவ்வொன்றாக மனதால் நினைக்கவும்.
yoga nidra SECVPF
மீண்டும் ஒரு முறை மேல்கண்ட முறைப்படி உடலுறுப்புகளை மனதால் நினைத்து பார்க்கவும். பிறகு இரு கால்கட்டை விரல்களையும், இரு கைகட்டை விரல்களையும் தலையின் உச்சிப் பகுதியையும் மனதால் ஒரே நேரத்தில் நினைக்க முயலவும். இப்படி செய்வது ஆரம்பத்தில் கடினமாக இருக்கும். அதனால் ஒன்றன்பின் ஒன்றாக கால் கட்டை விரல்களையும், கை கட்டை விரல்களையும் தலை பின் உச்சிப் பகுதியையும் 5 முறை மனதால் நினைக்கவும்.

முடிவில் நிதானமாக கை, கால் விரல்களை அசைத்து தலையை சில முறை இடது புறமும், வலது பக்கமும் சாய்த்து வலது பக்கம் ஒருக்கலித்து சில வினாடிகள் இருந்து பிறகு இடது பக்கம் ஒருக்களித்து சில வினாடிகள் இருந்து எழுந்து உட்காரவும்.

8 லிருந்து, 14 வயதிற்குட்பட்ட சிறு வயதினருக்கு யோக நித்திரை பயிற்சி அளிப்போர் மேற்கண்ட முறைப்படி செய்விப்பதைவிட கீழ்க்கண்ட மூன்றில் ஏதாவது ஒன்றை கற்பனையாக 10 நிமிடம் மனதால் நினைத்துப் பார்க்கச் சொல்லவும்.

1. ஒரு தோட்டத்தில் தனியாக இருந்து கொண்டு தனக்குப் பிடித்தமான பூக்களின் அழகான வடிவை ரசித்தல்.
2. தனக்குப் பிடித்தமான ஆலயத்திற்குப் போய் கடவுளை தரிசித்தல்.
3. சுற்றுலா சென்ற இடங்களில் தனக்கு மிகவும் பிடித்தமான இடத்தை நினைத்துப் பார்த்தல்.

பயன்கள் : மனதை கட்டுப்படுத்தவும், ஒரு நிலைப்படுத்தவும், அமைதிப்படுத்தவும். உதவுகிறது. உடல், மன சோர்வை, நீக்குகிறது. சிறு வயதிலிருந்து போக நித்திரை பழகும் மாணவர்கள் ஒழுக்க முடையவர்களாக அமைவார்கள். புத்தி மந்தம் நீங்கும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

உயர் ரத்த அழுத்தம், இருதய பக்க கோளாறுகள், தூக்கமின்மை மற்றும் பலவிதமான மன நோய்கள் நீங்கும் பயனுள்ள பயிற்சி இது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button