அலங்காரம்ஃபேஷன்ஆண்களுக்கு

பண்டிகைகள் மற்றும் விழாக்களில் ஆண்களுக்கான அழகிய ஆடை எது தெரியுமா?..

ஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வாணி. பெரும்பாலும் திருமணத்திற்கு அணிய ஏற்ற ஆடையாக ஷெர்வாணி திகழ்கின்றது. ஆயினும் தற்காலத்தில் ஆண்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் அணியவும் ஷெர்வாணியை பயன்படுத்தி வருகின்றனர்.
அதாவது ஷெர்வாணி என்பது பெண்கள் அணிகின்ற பிரம்மாண்ட ஆடைகளுக்கு ஏற்ற நிகரான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்படுகிறது. ஆண்கள் அணிகின்ற ஷெர்வாணி வடிவமைப்பு என்பது ஒன்பது வகையிலான பிரிவுகளில் அடங்கி விடுகிறது. அதாவது சிப்கான் ஷெர்வாணி, இன்டோ-வெஸ்டர்ன் ஷெர்வாணி, அச்கன் ஷெர்வாணி, ஜோத்பூரி ஷெர்வாணி, ஜாக்கெட் ஸ்டைல் ஷெர்வாணி, அனார்கலி ஸ்டைல் ஷெர்வாணி, பிரிண்டட் ஷெர்வாணி, பாகிஸ்தானி ஷெர்வாணி உள்பட ஒன்பது பிரிவுகளை அடிப்படையாக கொண்ட ஷெர்வாணி உருவாக்கம் செய்யப்படுகிறது.
men sherwani SECVPF

சிறப்பு மிகு சிப்கான் ஷெர்வாணி

பழங்கால ஆடை வடிவமைப்புக்கு ஏற்றவாறு அழகிய வடிவில் சிப்கான் உள்ளது. அதாவது ராஜாக்கள் எந்தவிதமான கம்பீர தோற்றத்துடன் கச்சிதமான, இறுக்கமான ஷெர்வாணி அணிந்து இருப்பார்களோ அதே போன்று வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது முகலாக காலத்தில் உருவாக்கப்பட்ட மாடல்களை அடிப்படையாக கொண்டு சிப்கான் ஷெர்வாணி வடிவம் பெற்றுள்ளது. மேல் சட்டை அமைப்பு என்பது இரட்டை அடுக்கு கொண்டதால் மார்பு பகுதியில் கவசம் போன்ற அமைப்பும் அதற்கு கீழ் இருந்து இரு பிரிவு வெட்டுகளுடன் கால் முட்டி வரை நீண்ட ஆடை அமைப்பு. இதனுடன் அதற்கேற்ற டர்பன், மாலை, கத்தி போன்றவை இணைப்பாகவும் கிடைக்கின்றது.

நவீன காலத்திற்கேற்ற இண்டோ-வெஸ்டர்ன் ஷெர்வாணி

தற்கால இளைஞர்கள் விரும்பி வாங்கும் பிரிவாக இண்டோ வெஸ்டர்ன் உள்ளது. இதன் மேம்பட்ட நவீன வடிவமைப்பு என்பது மாறுபட்ட வண்ண சேர்க்கை, வண்ண சாயல் போன்றவை கூடுதல் பொலிவை தருகின்றன. தொடை பகுதி வரை நீண்ட இந்த ஷெர்வாணி கைப்பகுதி, காலர் போன்றவை வண்ணத்துடனும், நடுப்பகுதி பிரகாசமான வண்ணத்துடன் காட்சி அமைப்புடன் பெரும்பாலும் காணப்படும். சில மாடல்கள் ஒற்றை வண்ண சாயலுடன் காட்சி தருகின்றது. இதன் மேற்புற அழகை மேம்படுத்த மணிகள், கற்கள் மற்றும் ராஜகம்பீர பட்டன்கள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

பிரிண்டட் ஷெர்வாணி

நவீன மாடல் என்பதில் பிரிண்டட் ஷெர்வாணியும் இடம் பிடித்துள்ளது. பலதரப்பட்ட உருவ அமைப்பு, வடிவம் மற்றும் வரைவோவிய வேலைப்பாடுகள் போன்றவை பிரிண்ட் செய்யப்பட்டவாறு மேம்பட்ட வண்ண கலவையுடன் உள்ளன. கண்டவுடன் மயங்கும் அமைப்பில் மேற்சட்டை அமைப்பு முழுவதும் பிரிண்ட் வேலைப்பாடு செய்யப்பட்டவாறு கிடைக்கின்றன. இரட்டை வண்ண சாயலில் கீழ்பகுதி பேண்ட்-க்கு இணையான வண்ண அமைப்பு மேல்சட்டையில் வெளிப்படும் வகையில் பூ வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும்.

ஜோத்பூரி ஷெர்வாணி

அதிகபட்ச ராயல் தோற்றத்தை வழங்கிடும் கச்சிதமான ஷெர்வாணி. இதன் உருவாக்கம் கவுரவ தோற்றத்தை அளிக்கும் வகையிலேயே இருக்கும். ஒற்றை வண்ணத்தில் அழகிய வெட்டுகள் மற்றும் பட்டன் அமைப்புகள் மட்டும் செய்யப்பட்டு இருக்கும். இதில் எம்ப்ராய்டரி மற்றும் கற்கள் ஏதும் பதியப்படாமல் அதிகபட்ச வேலைப்பாடு ஏதுமின்றி அதேசமயம் வியக்கும் வடிவமைப்புடன் ஜோத்பூரி ஷெர்வாணிகள் உள்ளன. மேம்பட்ட துணிகள் கொண்ட சற்று சுகமான அமைப்புடன் ஜோத்பூரி ஷெர்வாணி உருவாக்கப்படுகிறது.

ஜாக்கெட் ஸ்டைல் ஷெர்வாணி

உயர் தரமான துணி வகைகளை உஸ்ஸர், ராசில்க், பனாரஸி மற்றும் ஜாம்வார் கற்கள் கொண்டு அதிகபட்ச கவர்ச்சியுடன் இந்த ஷெர்வாணி உருவாக்கம் திகழ்கிறது. மேல்சட்டை அமைப்பு என்பது இரு அடுக்கு பிரிவுகளாக வேறு வண்ணப்பகுதிகளாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜாக்கெட் அமைப்பில் அதிகபட்ச வேலைப்பாடும் அதற்கு அடுத்த பகுதியில் பிளைன் துணி அமைப்பும் உள்ளவாறு உள்ளது. தங்க சரிகை மற்றும் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட் ஷெர்வாணி தங்கமயமாய் ஜொலிக்கும் அமைப்பில் உள்ளன.

அனார்கலி ஷெர்வாணி

மார்பு பகுதியில் கச்சிதமான இறுக பற்றும் அமைப்புடன் இருக்க கீழ் இறங்க இறங்க அகலமான அமைப்புடன் உள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது. சில மாடல்கள் குடை மாதிரி விரிந்த அமைப்புடனும், சில ‘க்ஷி’ வடிவ கட்டிங் கொண்டவாறும், சில கனமாக கோட் அமைப்புடன் உட்புற சுருள் வடிவ துணியமைப்புடன் திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. ராயல் லுக் தரும் வகையில் அனார்கலி ஷெர்வாணியின் மேற்பகுதியில் திரட் வேலைப்பாடு மற்றும் மணிகள், கற்கள் பதித்த வேலைப்பாடும் செய்யப்பட்டிருக்கும். அதுபோல் ஷெர்வாணி ஆடைகளுக்கு ஏற்ற ஷால் மற்றும் ஜீட்டிஸ் ஷு போன்றவை கம்பீர அமைப்புடன் இணைப்பாக கிடைக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button