ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

நோய்களை குணப்படுத்தும் தேநீர்கள்…..

காலை எழுந்தவுடன் சுடச்சுட டீ அருந்துவது தான் அனைவருக்கும் பிடித்தமானது. தேயிலை கொண்டு தயாரிக்கப்படுவதை மட்டுமே டீ என அழைப்பதில்லை. வேறு பல பசுந்தழைகள் கொண்டு கொதிக்க வைத்து தரப்படும் சுவையான சுடுநீர் கூட டீ என்றுதான் அழைக்கப்படுகிறது. உலகெங்கும் விதவிதமாக டீ குடிக்கும் பழக்கம் உள்ளது.
kulhar tea cups00004
தேயிலையிலேயே மாறுபட்ட சில வகைகளை கொண்டும் தேநீர் உருவாக்கி தரப்படுகிறது. அவற்றிற்கு என தனி மதிப்பும், சிறப்பு குணங்களும் உள்ளன. அந்த வகையில் சில பொருட்கள் கொண்டும் தேநீர் தயாரிக்கப்பட்டு தரப்படுகிறது. இப்பொருட்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தருவதை நம் முன்னோர் குடிநீர் என்றும், கசாயம் என்றும் அழைத்து வந்தனர். மாடர்ன் உலகில் எந்த மூலிகையும், பசுந்தழையும் போட்டு கொதிக்க வைத்து பரிமாறினால் அது தேநீர் வகையில் இணைக்கப்படுகிறது.

தேயிலை தவிர்த்து இஞ்சி, புதினா, கிரீன் டீ, லாவண்டர், செம்பருத்தி, ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, ரோஸ்ஹிப், லெமன் பாம், நெட்டில், ஹாதோரன் போன்ற விதவிதமான பொருட்களை கொண்டு டீ தயாரித்துத் தரப்படுகிறது. சில நம் நாட்டு மூலிகை மற்றும் செடிகளாக காணப்படுகிறது. சில அயல்நாட்டில் கிடைக்கக்கூடிய விதைகள், பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிறது.

எலுமிச்சை புல் தேநீர்

எலுமிச்சை புல் தேநீர் என்பது நாம் உணவு அருந்தியபின் குடிக்க வேண்டிய தேநீர். எலுமிச்சை புல்-யை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்தபின் குடித்திட வேண்டும். இந்த தேநீரில் உள்ள சிட்ரல் குண அமைப்பு உணவு செரிமானம் அடைவதற்கு உதவி புரிகிறது. நல்ல வாசம் மிகுந்த தேநீரான இது அனைவருக்கும் பிடித்தமானது.

பயன் நிறைந்த கிரீன் டீ

கிரீன் டீ என்பது பிரபலமான மூலிகையாகும். இதன் தேநீரில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதன் மூலம் உடலின் வயதான தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படும். புற்றுநோய் மற்றும் கட்டிகள் ஏற்படுவதை தடுப்பதுடன் உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

இளஞ்சூடான இஞ்சி தேநீர்

இஞ்சி உடல் சக்தியை அதிகரிப்பதுடன், புத்துணர்வை அதிகரிக்க செய்ய உதவுகிறது. உணவு செரிமானம் அடையவும், வாய் குமட்டலை தடுக்கவும் இஞ்சி தேநீர் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இஞ்சி தேநீர் அருந்துவது முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது.

புத்துணர்வுடன் கூடிய புதினா தேநீர்

நறுமணத்துடன் கூடிய தேநீர் – ஆக புதினா தேநீர் உள்ளது. இது குமட்டல், வாந்தி மற்றும் மலச்சிக்கலை தீர்க்கும் தேநீர் ஆக உள்ளது. மேலும், உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதுடன், சளி தொந்தரவுகள், ஆஸ்துமா மற்றும் தலைவலி போன்றவற்றை நீக்கும் விதமாகவும் அருந்திடலாம். இதய நோயாளிகள் புதினா தேநீர் அருந்துவதை தவிர்த்திடல் வேண்டும்.

சீமை சாமந்தி தேநீர்

கெமோமில் என்ற சீமை சாமந்தி என்ற மூலிகை உலகளவில் மிக பிரபலமான ஒன்றாகும். இது மன அழுத்தம் மற்றும் வயதான தோற்றத்தை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் தூக்கமின்மையை போக்கி நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. உலகளவில் ஆர்கானிக் சீமை சாமந்தி தேநீர் தயாரிப்புகள் தயார் செய்து விற்பனைக்கு வருகின்றன.

ரோஸ் ஹிப் தேநீர்

ரோஜா செடியில் இருந்து கிடைக்கும் பழம் போன்ற பகுதியே ரோஸ் ஹிப் என்பதாம். இதனை கொண்டும் தேநீர் உருவாக்கப்படுகிறது. விட்டமின்-சி சத்து நிறைந்த இந்த ரோஸ் ஹிப் தேநீர் அருந்துவதன் மூலம் சரும பளபளப்பு மற்றும் சீறுநீரக செயல்பாடு சிறப்பாக இருத்தல் போன்ற பயன்கள் ஏற்படுகிறது.

இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்தி தேநீர்

செம்பருத்தி பூவின் தேநீர் என்பது காய்ந்த செம்பருத்தி பூவினை கொண்டு தயாரிக்கப்படுகிறது. செம்பருத்தி தேநீர் அருந்துவதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைகின்றது. உடலில் செல் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாகவும் செம்பருத்தி தேநீர் உதவுகிறது.

லாவண்டர் பூ தேநீர் என்பதும் உலகளவில் பிரபலமான தேநீர் ஆக உள்ளது. இதனை அருந்துவதன் மூலம் காய்ச்சல், இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்குகிறது. மேலும் ஆறாத புண்களை கொண்டுள்ளோர் லாவண்டர் தேநீர் அருந்திவர சீக்கிரமே ஆறிவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button