அழகிய பூச்சாடி செய்வது எப்படி?

மண் சாடியை அலங்கரித்து அழகிய பூச்சாடியாக மாற்றுவது எப்படி?

தேவையானவை

  • மண் சாடி & தட்டு – 1 (4″ or 6 “) (Clay pot and lid )
  • வெள்ளை கிளே (clay or playing dough)
  • ஹாட் க்ளூ (hot glue – glue gun)
  • பூக்கள்
  • கறுப்பு மெட்டாலிக் பெயின்ட் (Black metalic paint)

​செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் தயாராய் எடுத்து கொள்ளவும்.

கிளேயினை நன்கு பிசைந்து மிருதுவாக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

அதில் ஒரு உருண்டையை எடுத்து மெல்லிய கோல் போல உருட்டவும்.

மேலும் ஒரு உருண்டையை எடுத்து தட்டையாக்கி கோலின் முனையை சுற்றி மூடவும்.

ஏனைய உருண்டைகளை பெரிதும் சிறிதுமான தட்டையான இதழ்களாக செய்யவும்.

பின்னர் அவ்விதழ்களை கோலில் சுற்றி சுற்றி வைத்து ரோஜாப்பூப் போல ஒழுங்கு படுத்தவும். இவ்வாறு 3 பூக்கள் செய்யவும்.

மேலும் சிறிது கிளே எடுத்து பிசைந்து சப்பாத்திக்கு தட்டுவது போல தட்டையாக்கவும்.

பின்னர் இலை வடிவ அச்சினால் இலைகளை வெட்டவும். இலை அச்சு இல்லாவிட்டால் இலையின் உருவத்தை வரைந்து கூரான கத்தியால் வெட்டலாம்.

ஒரு கூரான பென்சிலால் சிறிது அழுத்தம் கொடுத்து இலையின் நரம்புகளை வரையவும்.

மேலும் சிறிது கிளே எடுத்து இரண்டாக பிரித்து மெல்லிய நீண்ட பாம்பு போல உருட்டவும். (பூக்கொடி – vines)

எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் போட்டு காய விடவும்.

பின்னர் மண் சாடியின் மேற்பக்கத்தில் vinesஐ ஹாட் க்ளூவை கொண்டு ஒட்டவும். gluegun இல்லாவிட்டால் uhu, super glue என்பவற்றாலும் ஒட்டலாம்.

அடுத்து இந்த vinesஇன் மேல் பூக்களையும் இலைகளையும் வைத்து ஒட்டவும்.

பின்னர் சாடியை அதன் அடித்தட்டுடன் க்ளூவால் ஒட்டி கறுப்பு மெட்டாலிக் பெயின்டால் வர்ணம் தீட்டி நன்கு காய விடவும்.

வர்ணம் நன்கு காய்ந்ததும் பிடித்த பூக்களை பிடித்தமான முறையில் வைத்து அலங்கரிக்கவும்.

Leave a Reply