ஆரோக்கியம்மருத்துவ குறிப்பு

கவர்ச்சியைத் தாண்டிய அறிவியல்!

16“கவர்ச்சிக்கான அடையாளமாக மட்டுமே கவனிக்கப்படுகிற பெண்களின் மார்பகங்கள், பல விஞ்ஞான விஷயங் களையும் வித்தியாச குணங்களையும் உள்ளடக்கியவை. அதன் கவர்ச்சியில் காட்டும் அக்கறையில் கொஞ்சம், அது பற்றிய அறிவியலைத் தெரிந்து கொள்வதிலும் காட்டலாமே அனைவரும்!” என்கிறார் டாக்டர் நிவேதிதா.

“மார்பக வளர்ச்சியின் ஆரம்பமே பெண் பூப்படையும் பருவத்தின் முதல் கட்டம். அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சியும் மார்பக வளர்ச்சியும் ஒரே நேரத்தில் நடைபெறும். பெண்கள் பூப்படையும் காலத்துக்கு ஓராண்டு முன்பாகவே மார்பக வளர்ச்சி தொடங்கிவிடும். இந்த முன்னேற்றம் பல வருடங்கள் தொடரும்.

குழந்தைப் பருவத்தில் மார்பகங்கள் தட்டையாக வளர்ச்சியின்றி இருக்கும். அடுத்ததாக மார்பகங்கள் உருவாகும் பருவம். இந்த நிலையில் மார்புக்காம்புகளும் மார்பகங்களும் சிறிது பெரிதாகி, அங்கே கொழுப்பு செல்கள் உருவாகும்.

அதையடுத்து மார்பகக் காம்புகளைச் சுற்றியுள்ள பகுதியும் பெரிதாக ஆரம்பிக்கும். தொடக்கத்தில் இந்த மாற்றத்தை நம்மால் காண இயலாது. ஏனெனில், மார்பக வளர்ச்சி மிகவும் மெதுவாக நடைபெறும். ஒரே ஒரு வித்தியாசம்… காம்புப் பகுதி லேசாக துருத்திக் கொண்டு காணப்படும். ஆனாலும், அவை தட்டையாகவே இருக்கும்.அடுத்த நிலையில் மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கும். தொடக்கத்தில் கூம்பு வடிவத்திலும் பிறகு உருண்டை வடிவத்திலும் காணப்படும். காம்புகளைச் சுற்றிய பகுதி கருமையாகவும் பூரிப்புடனும் மாறும்.

அந்தப் பகுதிகள் துருத்திக் கொண்டு தெரிந்தாலும், பூப்படையும் பருவம் வரை தட்டையாகவே இருக்கும். பெண்கள் கருவுற்றிருக்கும் போது மட்டுமே மார்பகக் காம்புகள் விரைப்பு நிலையில் காணப்படும்.மார்பக வளர்ச்சியின் இந்த ஆரம்ப நிலைக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் செயல்பாடே முக்கியக் காரணம். அதன் விளைவாக மார்பகத்தில் கொழுப்புச் சத்து சேர்கிறது. பால் சுரப்புக்கான குழாய்கள் வளர்கின்றன. இதுதான் மார்பகங்கள் பெரிதாக வளர்வதற்கேற்ற தருணம்.

பெண் மாதவிலக்கு ஆன காலங்களில் அவளது கருப்பை புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோனை சுரக்கின்றன. அது சில மாற்றங் களை உண்டாக்குகிறது. பால் சுரப்புக் குழாய்களில் பால் சுரப்பிகளின் வளர்ச்சிக்கு இதுவே காரணம்.

இந்த மாற்றம் நிகழும்போது, மார்பகங்களின் வளர்ச்சியில் பெரிய மாற்றத்தை உணர முடியாது. என்றாலும், இது மிக முக்கியமான ஒன்றாகும். மார்பகங்களின் முதல் கட்ட வளர்ச்சி முதல், பூப்படையும் காலத்து வளர்ச்சி வரையிலான இந்த மாற்றங்கள் சில பெண்களுக்கு 3 முதல் 5 வருடங்களும், இன்னும் சிலருக்கு 10 வருடங்கள் வரையிலும் தொடரும்.

மார்பக வளர்ச்சி நடைபெறும் போது வலியும் உறுத்தலும் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படும். இது இயற்கையானதே. சருமத்தில் அரிப்பும் இருக்கக்கூடும். இது தோல் விரிவடைவதை காட்டும் அறிகுறிதான்.மார்பக வளர்ச்சியின் போது ஒரு பெண்ணுக்கு மிகவும் அவசியமான அயோடின் தேவை அதிகரிக்கும்.

ஆரோக்கியமான மார்பக வளர்ச்சி யில் அயோடினின் பங்கு முக்கியமானது. மார்பகங்களைச் சுற்றியுள்ள பகுதியில் திசுக்களை விடவும் அயோடினின் அளவே அதிகம். பெண்களின் உடலி லேயே தைராய்டு சுரப்பிகளுக்கு அடுத்தபடியாக மார்பகத் திசுக்களில்தான் அதிக அயோடின் உள்ளது.

பெண்களின் மார்பக வளர்ச்சி கூடக் கூட, அவர்களது அயோடின் தேவையும் அதிகரிக்கும்.பூப்படையும் பருவத்தில் உண்டாகும் மார்பக வளர்ச்சியை முழு வளர்ச்சி என்றோ, முதிர்ந்த வளர்ச்சி என்றோ சொல்ல முடியாது. கருவுற்றிருக்கும் போது மட்டுமே மார்பக வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் முழுமையாக நடைபெறும்.மார்பக வளர்ச்சி 8 வயதில் ஆரம்பிக்கும்.

சிலருக்கு 13 வயதில் கூட தாமதமாகத் தொடங்கலாம். 14 வயதைத் தொட்டு விட்ட நிலையிலும், பூப்படைவதற்கான அறிகுறிகளான மார்பக வளர்ச்சியோ, அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சியோ இல்லாவிட்டால், அதற்கு மேலும் தாமதிக்காமல் மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்.

15 வயது வரை பூப்பெய்தாத பெண்களுக்கும் மருத்துவ ஆலோசனை அவசியம்.” மார்பக வளர்ச்சி பற்றிய தகவல்களை அடுத்த இதழிலும் தொடர்வோம்.கருவுற்றிருக்கும் போது மட்டுமே மார்பக வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் முழுமையாக நடைபெறும். – See more at: http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=50&id1=111&id2=0&issue=20140929#sthash.1kv7t8LL.dpuf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button