30.8 C
Chennai
Monday, May 12, 2025
mathulai2
பழரச வகைகள்அறுசுவைஆரோக்கியம்

இந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன…..

பானங்கள் அருந்துவது என்பது ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களில் முக்கியமானதொன்றாகும். பச்சையாக தயாரிக்கப்படும் பானங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு எவ்வளாவு முக்கியமானதோ அதே போன்று பழச்சாற்றில் தயாரிக்கப்படும் பல நன்மைகளைச் செய்கின்றன.

அதிலும் சிறப்பாக மாதுளம்பழத்தில் தயாரிக்கப்படும் பானம் மிகுந்த சுவையுடையதாகவும், இலகுவாகக் கிடைக்கக் கூடியதாகவும் இருப்பதுடன், அதில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

மாதுளம்பழச் சாற்றில் பல ஊட்டச் சத்துக்கள் காணப்படுவதுடன், இது கிறீன் டீயை விட ஆரோக்கியமானது என பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. ரெட் வைன் தயாரிக்கும் போதும் மாதுளம்பழத்தின் சாறு பயன்படுத்துவதுடன் இதனை தினமும் குடிப்பதனால் எண்ணற்ற பல மருத்துவ நன்மைகள் கிடைக்கும்.

மாதுளம்பழ பானத்தினை அருந்துவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

mathulai2

1. புற்றுநோய்க்கு எதிராகச் செயற்படும்.
மாதுளம் பழச் சாறு பல வகையான புற்றுநோய்களையும் அதன் கட்டிகளையும் குணப்படுத்துவதற்கு உதவுகின்றது. குறிப்பாக ஆணுறுப்பு, மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்களின் தீர்வுக்கு இது உதவுகின்றது. இது புற்றுநோய்க் கலங்கள் உற்பத்தியை தடுப்பதுடன் அதனை அழிக்கவும் செய்கிறது என பல ஆய்வுகளில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

2. ஆரோக்கியமான இதயத்திற்கு.
மாதுளம்பழச் சாறு இருதய நோய்கள் வராமல் பாதுகாப்பதுடன் அதன் ஆரோக்கியத்தையும் பேணுகிறது. மாதுளம்பழப் பானத்தைப் பருகுவதனால் இரத்த அழுத்தம் குறைவடைவதுடன், இரத்த நாடிகலில் ஏற்படும் அடைப்புக்களையும் நீக்கி விடும்.

3. நீரிழிவு நோய் வராமல் பாதுகாப்பதற்கு.
பழங்கள் பொதுவாக நீரிழிவு நோயின் போது பயன்படுத்துவதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் மாதுளம்பழ பானத்தைப் பருகுவதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை இலகுவாக குறைத்து விடுகிறது.

4. இரத்த சோகையைக் குணப்படுத்துவதற்கு.
இதில் அதிகளவான் இரும்புச் சத்துக் காணப்படுவதனால் இரத்தசோகை நோயாளருக்குச் சிறந்தது. மேலும் இதில் காணப்படும் விட்டமின் கே இரத்தம் உறைவதற்கு உதவுவதுடன், போலேற் இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதற்கு உதவுகின்றது.

5. ஆரோக்கியமான சருமத்திற்கு.
மாதுளம் பழத்தில் காணப்படும் விட்டமின் சி சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. இந்தப் பானத்தைப் பருகுவதனால் சருமம் வயதடைவதைத் தடுத்து புத்துணர்ச்சி பெறச் செய்கிறது. மேலும் இது சருமச் சுருக்கங்களைப் போக்குவதுடன் பருக்கள் போன்ற சருமப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உதவுகின்றது.

6. ஆரோக்கியமான முடிக்கு.
மாதுளம்பழப் பானத்தை அருந்துவதனால் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் முடிகளின் வேர்களை வலிமைப்படுத்தும். இதனால் முடி உதிர்வைத் தடுத்து அடர்த்தியான ஆரோக்கியமான முடியினைப் பெற முடியும்.

7. பற்களின் வலிமைக்கு.
இந்தப் பானம் பருகுவதனால் பற்களின் மீது படலங்கல் தோன்றுவதைத் தடுக்க முடியும். இது மவுத் வோஸ்களை விட சிறந்த தீர்வைத் தரக் கூடியது. இதனால் பற்களின் சுத்தமும் சுகாதாரமும் பேணப்படுகிறது.

8. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்வதற்கு.
இதில் அதிகளவான் விட்டமின் சி இருப்பதனால் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், அதனால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கும்.

9. சமிபாட்டைத் தூண்டுவதற்கு.
இதில் காணப்ப்டும் நார்ப் பொருட்கள் சமிபாட்டு செயற்பாட்டை சீராக நடை பெற உதவுகிறது.

Related posts

வாழைப்பழ முட்டை தோசை

nathan

சுவிஸ் பால் பயிற்சி வயிறு, இடுப்பு சதையை குறைக்கும்

nathan

பெண்கள் எப்பொழுது வேண்டுமானலும் உடற்பயிற்சி செய்யலாமா

nathan

இதயத்தைக் காக்கும் காளான்

nathan

ஆண்மை அதிகரிக்க பனங்கற்கண்டின் நன்மைகள்!…

sangika

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்

nathan

உங்க ஃபேவரட் ஹீரோயினோட வெயிட் குறைக்கிற சீக்ரட் தெரிஞ்சிக்கணுமா?

nathan

வலிப்பு நோய் இருப்பவர்கள் தினமும் இதை செய்து வாருங்கள்…

sangika

சுவையான சீஸ் ஆலு பன்ச் ரெடி..

sangika