அறுசுவைஅசைவ வகைகள்

மீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு என்ன தெரியுமா?….

மீன் வறுக்கும் போது

கோழி, ஆடு, நண்டு, மீன் ஆகியவை அசைவ உணவுப் பட்டியலில் உள்ளவற்றில் ஆரோக்கியத்தில் முதல் இடம் பிடிப்பது மீன். மீனில் கொழுப்புச் சத்தை விட புரதச் சத்துகள் மிகுந்துள்ளன. கண் பார்வை குறைபாடு, நரம்புத் தளர்ச்சி, இதயநோய் ஆகியவற்றிலிருந்து மீன் உணவு நம்மைப் பாதுகாக்கிறது. எனவே நாம் மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு!

வறுவல் செய்யும் போது பெரும்பாலோர் கடைகளில் ரெடிமேடாக உள்ள பொடியை உபயோகப்படுத்துகின்றனர். ஆனால் இவற்றைப் பயன்படுத்தும் போது அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. இதனால் மீனின் உண்மையான சுவையும் மாற வாய்ப்பு இருக்கிறது.

fish fry

இந்த ரெடிமேட் பொடியை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு அதிகப்படியான காரம் போன்ற உணர்வு ஏற்பட்டு அவர்கள் மீன் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். இதை தவிர்க்கும் வகையில் முடிந்த வரை மீன் வறுவலை வீட்டு மிளகாய் பொடி கலவையில் ஊற வைத்து வறுப்பதே நல்லது. ஹோட்டலில் கிடைக்கும் சிவப்பான நிறம் போன்ற தோற்றம் வேண்டுமென்றால் அந்த கலவையில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து அதை 5 நிமிடம் பிரிட்ஜில் வைத்து அதன் பின்பு வறுத்து எடுத்தால் பொன்னிறமான நிறம் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button