ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில், இது மிக பெரிய ஆபத்தை தரும்….

நீரே முதல் வளம்..!

நமது பூமியானது மூன்று பங்கு நீரால் சூழப்பட்டதாகும். இங்குள்ள உயிரினங்கள் கூட தண்ணீரை நம்பி தான் தனது வாழ்வாதாரத்தை ஓட்டுகிறது. நீர் இல்லையென்றால் ஒரு நொடி கூட இங்குள்ள ஜீவ ராசிகள் உயிர் வாழ இயலாது. தண்ணீர் நமது தாகத்தை போக்குவதோடு நமது வாழ்வையும் வளமாக வைத்து கொள்கிறது.

காரமா..?

பலர் காரமாக எதையாவது சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். குறிப்பாக மிளகாயை கடித்து விட்டால் அவ்வளவு தான். கத்தி கூப்பாடே போட்டு விடுவார்கள். இந்த நிலையில் நாம் நீர் அருந்த கூடாது. ஏனென்றால், இவை குடல் பகுதிக்கு சென்று வேறு வித விளைவுகளை வயிற்றில் ஏற்படுத்துமாம்.

Drinking Water

தூங்குவதற்கு முன் எப்படி..?

பலருக்கு தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், பொதுவாகவே இரவு நேரத்தில் கிட்னி சற்று மெதுவாகவே வேலை செய்யும். இது போன்ற நிலையில், உங்களின் முகம் காலையில் எழுந்தவுடன் சிறிது வீங்கி இருக்க கூடும். அத்துடன் இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் தூக்கமும் தடைபட கூடும்.

பீச்சுக்கு போவீங்களா..?

கடற்கரை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு வித குஷி எப்போதும் இருக்க தான் செய்யும். ஆனால், கடலுக்கு போனதும் விளையட்டுத்தனமாக கூட கடல் நீரை குடிக்க கூடாது. ஏனெனில், இதில் ஏராளமான மனித உடலில் இருந்து வெளியேறிய ஒட்டுண்ணி வகை வைரஸ்கள் இருக்கும். இவை மிக அபாயகரமான விளைவை தந்து விடும்.

எது சரி..?

சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும், அதற்கு முன்பும்… இப்படி எல்லா நேரத்திலும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. இவை செரிமான கோளாறை தரும். மேலும், மது அல்லது வேறு ஏதேனும் குளிர் பானங்களை சாப்பிடும் போது குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக மாறி விடும்.

கிட்னிக்கு ஆபத்து..!

நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உங்களின் உடலில் பாதிப்பை சந்திக்கும் முதல் உறுப்பு உங்களின் கிட்னி தான். அதிக தண்ணீர் கிட்னியின் செயல்திறனை குறைத்து விடும். மேலும், ரத்த ஓட்டத்தையும் பாதிக்கும்.

உடற்பயிற்சிக்கு பிறகு தண்ணீரா..?

பலர் செய்யும் மிக பெரிய தப்பு இது தான். உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள். இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.

நிறமற்ற சிறுநீரா..?

பெரும்பாலும் எல்லோருக்கும் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் தான் சிறுநீர் வெளியேறும். ஆனால், இதற்கு மாறாக நிறமற்ற சிறுநீர் வெளியேறினால் உங்களின் உடலில் அளவுக்கு அதிகமாக நீர் சேர்ந்துள்ளது என அர்த்தம். இது ஆபத்தான நிலையை உடலுக்கு ஏற்படுத்தும்.

பாட்டில் நீர் எப்படி..?

நாகரீகமானது, தண்ணீரை பாட்டிலுக்குள் அடைக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டது. ஆனால், நிச்சயம் இது தவறான வளர்ச்சியே. பாட்டிலில் நாம் நீர் அருந்தினால் புற்றுநோய், உடல் பருமன், வயிற்று வலி போன்ற பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர தொடங்கும். எனவே, பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை குடிக்காதீர்கள்.

அளவுக்கு அதிகமாக தண்ணீரா..?

தாகம் எடுக்கிறது என்று தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில், இது மிக பெரிய ஆபத்தை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உடலில் சோடியம் அளவை இவை குறைத்து பாதிப்பை தரும். மேலும், உயிருக்கே கூட இதனால் ஆபத்து ஏற்படலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button