அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்புமுகப்பரு

இயற்கையான முறையையில் கரும்புள்ளிகளை போக்க……

கரும்புள்ளிகள் முகத்தின் அழகையே கெடுக்கும். அவ்வாறு முகத்தில் கரும்புள்ளி இருந்தால் அதை குறைக்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள இயற்கையான முறையை பயன்படுத்தலாம்.
கொத்தமல்லி மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவ வேண்டும். அந்த பேஸ்ட் நன்கு காய்ந்த பிறகு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையும்.

காய்ந்த ஆரஞ்சு தோலை பவுடர் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் ஊற்றி பேஸ்ட் போல் ஒரு மாஸ்க் தயாரித்து அதை முகத்தில் பூசி வர விரைவில் கரும்புள்ளி போய்விடும்.

ac8e5191e98a9d726b25a27615b0f614

ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து தயிர் சமமாகக் கலந்து, அதனை முகத்தில் பூசி சுமார் பதினைந்து நிமிடம் கழித்து வெந்நீரில் முகத்தை கழுவ கரும்புள்ளிகள் மெல்ல மறையும்.

ஜாதிக்காயை நான்கு மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து பின் அதனை நன்கு அரைக்கவேண்டும். இந்த கலவையை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி ஒரு மணிநேரம் விட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர கரும்புள்ளிகள் மறையும்.

இரவில் படுக்கப்போகும் முன் இரண்டு ஸ்பூன் கறிவேப்பிலை சாற்றில் அரை ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து கரும்புள்ளிக்ள மற்றும் வடுக்களின் மீது தடவி வர குணம் காணலாம்

பாலுடன், அரிசி சேர்த்து ஐந்து மணிநேரம் ஊற வைத்து, அதனை நன்றாக அரைத்து அதன் பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்தலாம். அரிசி மாவு மிகச்சிறந்த கிளன்சராகவும் ஸ்கிரப்பாகவும் பயன்படும். சருமத் துளைகளுக்குள் இருக்கிற அழுக்குகளை வெளியேற்றும்.

சிறிதளவு தேனை கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் அது ஸ்கின் போர்ஸை இறுக்கமாக்கி கரும்புள்ளியை அகற்றும். தேன் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button