மருத்துவ குறிப்பு

பெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்

பெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்
பல பெண்கள் மார்பகங்களை சரியான அளவில் வைத்துக் கொள்வதை தங்களது உடல் பாராமரிப்பில் சிரமமாக கருதுகின்றனர். மார்பகங்கள் பெரியதாக உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி ஏற்படுகின்றன. அதையும் தாண்டி, மார்பகங்கள் பெரியதாய் இருப்பதால் பெண்கள் எதிர்க்கொள்ளும் பெரிய அவஸ்த்தையே அவர்களது வெளித்தோற்றம் தான்.எவ்வளவு அழகாக இருந்தாலும், அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சி பெண்களுடைய அழகினை சீர்கெடுத்து விடுகிறது. உங்களுடைய மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள்  இயற்கையான வழிமுறைகளை கையாண்டாலே போதும், உங்களுடைய மார்பகங்களை சரியான அளவில் பேணிக்காக்க முடியும்.இப்போது மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள எளிதான வழிகளை பார்க்கலாம்..  கார்டியோ பயிற்சி மேற்கொண்டு வந்தால் நீங்கள் எளிதாக உங்கள் மார்பக பகுதிகளில் உள்ள கொழுப்புகளை குறைக்க இயலும். தொடர்ந்து 10 நாட்கள் கார்டியோ பயிற்சிகளை செய்து வந்தலே இதன் பலனை நீங்கள் கண்கூடப் பார்க்கலாம்.மார்பக அளவை இயற்கையான முறையில் குறைக்க, ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி மிக எளிதான வழியில் விரைவில் நல்ல பயன் தரும். இயற்கையான எண்ணெய்களை கொண்டு உங்களது மார்பக பகுதிகளில் மசாஜ் செய்வதும், உங்களது மார்பக அளவை குறைக்க நல்ல பயன் தருவதாய் உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை கிரீன் டீ பருகி வந்தால், உங்களது மார்பக அளவை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். அதுமட்டுமல்லாது தினமும் கிரீன் டீ பருகுவது உடல்நலத்திற்கும் நன்மை விளைவிக்கும். முட்டையின் வெள்ளை கருவினை ஒரு டீஸ்பூன் வெங்காயத்தின் சாறோடு கலந்து உங்களது மார்பகங்களில் மாஸ்க் செய்து வந்தால் உங்கள் மார்பகங்கள் இறுக்கமடையும்.

இதனால் உங்களது மார்பகம் சிறியதாக சரியான அளவில் தோற்றமளிக்க உதவும். வாரத்தில் இரண்டு முறை நீங்கள் இந்த மாஸ்க்கை உபயோகப்படுத்தி வந்தால் நல்ல பயன் தரும். உங்கள் கை நிறைய வேப்ப இலைகளை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பின் அதோடு கொஞ்சம் மஞ்சள் மற்றும் தேனை கலந்து பருகி வந்தால் உங்களது மார்பகத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவும்.

இதை தொடர்ந்து இரண்டு வாரம் செய்து வந்தாலே நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.  மீன் எண்ணெய்யில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து உங்களது மார்பகத்தில் இருக்கும் கொழுப்பை குறைத்து மார்பக அளவை குறைக்க உதவுகிறது.

Related posts

சர்க்கரை நோயாளிகள் ஏன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்?

nathan

பிரசவத்திற்கு பிறகு அதிகரிக்கும் வயிற்று கொழுப்பைக் கரைப்பதற்கான சில எளிய வழிகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

மருத்துவ உலகில் இந்த நிலையை `எரோட்டோமேனியா’ (Erotomania) என்கிறார்கள்….

sangika

முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம் உங்களுக்கு தெரியுமா???

nathan

பெண்களுக்கு வரும் உடலுறவு கனவுகள் எப்படி இருக்கும் என உங்களுக்கு தெரியுமா?

nathan

உங்களுக்கு இந்த அறிகுறிகள்ல ஏதாவது இருக்கா?அப்ப கண்டிப்பாக வாசியுங்க….

nathan

உங்களுக்கு தெரியுமா எவ்வளவு வலி இருந்தாலும் இந்த மூலிகை இருந்தா போதும்…

nathan

நீங்கள் தினமும் கழுத்து வலியால் கஷ்டப்படுறீங்களா?அப்ப இத படிங்க!

nathan

இப்படியும் பற்களை வெண்மை ஆக்கலாம் என உங்களுக்கு தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan