உடல் பயிற்சிஆரோக்கியம்

டம்பெல் தூக்குவது உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். …..

தசை வளர்ச்சி

டம்பெல்ஸை நீங்கள் தூக்கும்போது அது உங்கள் கை தசைகளை பயன்படுத்தி தூக்குகிறீர்கள். டம்பெல்லின் எடை உங்கள் கை தசைகளில் பிரதிபலிக்கும். நீங்கள் டம்பெல் தூக்கும்போது அது உங்கள் கை தசைகளை அதிக வலுவாக்க உதவும். டம்பெல் தூக்குவது இரண்டு வகையான நன்மைகளை வழங்கும் ஒன்று தசைகளை வலுவாக்குவது மற்றொன்று வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பது.

razvedenie

இதய ஆரோக்கியம்

டம்பெல் தூக்குவது உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். தொடர்ச்சியாக டம்பெல் தூக்குவது உங்கள் இதய துடிப்பை சீராக்கும். உடற்பயிற்சி செய்ய புதிதாக தொடங்குபவர்கள் கூட தினமும் 30 நிமிடம் டம்பெல் தூக்குவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். உங்கள் இதய துடிப்பு சீராக இருப்பதே உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு அடிப்படையாகும்.

எடை குறைப்பு

டம்பெல் மூலம் நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் கலோரிகளை எரிப்பதற்கான சிறந்த ஏரோபிக் பயிற்சியாகும். இந்த கலோரிகள் எரிப்பு உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. மேலும் இது எடை குறைப்பிற்கான மிகச்சிறந்த மற்றும் எளிதான வழியாகும். ஏனெனில் நீங்கள் டம்பெல் என்பது உங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாகும்.

தசைகளின் செயல்படும் அளவை அதிகரிக்கும்

டம்பெல் உடற்பயிற்சியினால் நிறைய ஆரோக்கிய பலன்கள் உள்ளது. இது தசைகளை வெளிப்புறமிருந்தும், உட்புறமிருந்தும் வலிமையாக்கும். இது மூட்டுகளில் உராய்வு ஏற்படுவதை தடுக்கிறது. உடற்பயிற்சியை தொடங்கும்போது எடை குறைவான டம்பெல்லில் இருந்து தொடங்கவும் இது அனைத்து தசைகளையும் வலுவாக்கும். குறிப்பிட்ட தசையை மட்டும் வலுவாக்க விரும்பினால் எடை அதிகமான டம்பெல்லை பயன்படுத்தவும்.

தசைகளின் சகிப்புத்தன்மை

இது விளையாட்டு வீரர்களுக்கு மிகச்சிறந்த பயனளிப்பதாகும். அவர்கள் தசைகளின் சகிப்புத்தன்மையை அதிகரிக்க டம்பெல்லை பயன்படுத்தலாம். குறிப்பாக டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டு விளையாடுபவர்கள் இந்த டம்பெல் பயிற்சியை செய்வது அவர்களுக்கு மிகவும் நல்லது. இது அவர்கள் நீண்ட நேரம் சோர்வடையாமல் விளையாட இது உதவியாய் இருக்கும்.

எலும்புகளின் ஆரோக்கியம்

எடை தூக்கும் பயிற்சிகள் பொதுவாக எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. டம்பெல்ஸ் அனைவரும் செய்யக்கூடிய எளிய மற்றும் பயனுள்ள உடற்பயிற்சி ஆகும். உங்களின் தனிப்பட்ட தேவைக்கேற்ப நீங்கள் தூக்கும் டம்பெல்லின் எடையை மாற்றியமைத்து கொள்ளலாம். டம்பெல்லை உபயோகிக்கும் முன் சிலவற்றை செய்யவேண்டியது அவசியம்.

தயாராகுதல்

உடற்பயிற்சி தொடங்கும் முன் தயாராக வேண்டியது அவசியம். இது உடற்பயிற்சியின் போது காயங்கள் ஏற்படுவதை தடுக்கும். எனவே எளிமையான உடற்பயிற்சிகளான ஜாக்கிங், நடைப்பயிற்சி, வளைவது போன்றவற்றை செய்யவும். இது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், டம்பெல் தூக்குவதை எளிதாகவும் மாற்றக்கூடும்.

எடை குறைவான டம்பெல்

டம்பெல் உடற்பயிற்சியை தொடங்கும் முன் குறைவான எடை கொண்ட டம்பெல் கொண்டு தொடங்குவது நல்லது. குறைந்தது 10 முறை தொடர்ந்து டம்பெல்லை தூக்குவது நல்ல பலனை அளிக்கும். போதிய அனுபவம் இல்லாமல் தொடக்கத்திலியே அதிக எடை கொண்ட டம்பெலை தூக்குவது தசைப்பிடிப்பு மற்றும் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

சரியான நிலை

டம்பெல் உடற்பயிற்சி தொடங்கியவுடன் தொடர்ந்து அதே நிலையை பின்பற்றுங்கள். இந்த உடற்பயிற்சி

பற்றி நன்கு தெரிந்துகொண்டு அதன்பிறகு பயிற்சியை தொடங்கவும். முதுகெலும்பை வளைக்கலால் நேராக நின்று தோள்களை சீராக அசைக்கவும். உடபயிற்சியின்போது காயம் ஏற்படமால் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button