அழகு குறிப்புகள்கை பராமரிப்பு

கைகளை பராமரிக்க சில டிப்ஸ் கள் இதோ…

மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம். இந்த செயல்களுக்கு ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம். இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனினும், கைகளை பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால், இவற்றை தவிர்க்க முடியும். அதற்காக சில டிப்ஸ் கள் இதோ…

p57b 1

கைகள் பராமரிப்பு:
முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.

*ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.

*கைகளின் தோல் மிகவும் வறட்சியாக உடையவர்கள், மேலே சொன்ன படி கைகளை கழுவிய பின், ஹேண்ட் கிரீமை அடர்த்தியாக, தடவ வேண்டும். பின், அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தி, சூடான பாரபின் மெழுகை ஊற்ற வேண்டும். பாரபின் மெழுகின் சூட்டால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் காணப்படும் துளைகள் விரிந்து ஹேண்ட் கிரீம் சிறப்பாக உறிஞ்சப்படும்.

* கைகளில், இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் (எக்ஸ்போலியன்ட்) தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின், சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவிய பின், மிதமான ஹேண்ட் வாஷ் தடவ வேண்டும்.

அவற்றை மிதமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் சீராகும். மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின், ஹேண்ட் லோஷன் தடவ வேண் டும். கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மிகவும் குளிர்ந்த பிரதேசத்தில் வசிப்பவர்கள், கைகளுக்கு கம்பளி உறைகள் அணிந்து, கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சன்ஸ் கிரீன்: வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால், இவை, தடுக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button