ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்மருத்துவ குறிப்பு

சந்தன மரங்கள் அதிகம் பயன் தருபவை……

வறண்ட நிலத்தில் விளையும் மரம்தான் சந்தனம். இது மிகவும் விலை உயர்ந்த மர வகையாகும்.

சந்தன மரங்கள் பொதுவாக, குளிர்ச்சியை இலைகள் மூலம் வெளியிடுபவை, இதன் காரணமாக, சந்தன மரங்கள் அடர்ந்து வளரும் இடங்களில் அடிக்கடி மழைப்பொழிவு ஏற்பட்டு, மண் குளிரும்.

சந்தன மரத்தில் அதிகம் பயன் தருபவை அதன் மரக்கட்டைகள் தான், சந்தன விதைகள் மருத்துவத்தில், பயன்படுகின்றன.

sandal 1

வெள்ளை சந்தன மரக்கட்டைகள் மனிதரின் உடல் நலத்தில் இவற்றின் பயன்பாடுகள் சரும பராமரிப்பு மற்றும் உடல் உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு துணைபுரிகின்றன.

அரோமாதெரபி எனும் வாசனை மருத்துவத்தில், சந்தன எண்ணைகள் மனதின் அமைதிக்கும், மன அழுத்த பாதிப்புகளைப் போக்கவும், உடல் சரும வியாதிகளைப் போக்கவும், பயன்படுகிறது.

உடல் சூட்டை தணிக்கும் சித்த வைத்திய முறைகளில் அதிக பலன்கள் தரும் மருந்துகள் அனைத்தும் சந்தன எண்ணை மூலம் தயாரிக்கப்படும். மேலும் உடலில் பூசும் கிரீம்கள், வெயிலில் தோல் கருத்த சரும பாதிப்புகளை சரிசெய்யவும், தோலுக்கு இறுக்கத்தை அளிக்கவும் பயன்படுகின்றன.

சந்தனக்கட்டைகளை அரைத்து தலையில் தடவி வந்தால் கோடை வெயிலால் தலையில் ஏற்படும் கொப்புளங்கள் குணமாகும். மேலும், தலைவலி, மூளை, இதய பாதிப்புகளை சரிசெய்து, உடல் நிலையை சமநிலையில் வைக்கும்.

சுத்தம் செய்த நல்ல சந்தனத்தை நீரில் கரைத்து அருந்திவந்தால் இரத்தத்தை தூய்மை செய்து, உடலை குளுமையாக்கி, மனதை ஊக்கப்படுத்தி, சுறுசுறுப்பாகவே வைத்திருக்கும்.

சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றுடன் அரைத்து உடலில் உள்ள அரிப்பு, நமைச்சல், சொறி சிரங்கு, தேமல், வீக்கம் மற்றும் சகல சரும வியாதிகளுக்கும் குணமாகும்.

சந்தனத்தூளை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகிவந்தால் சிறுநீர் எரிச்சல் விலகிவிடும், இதுவே இரத்த மூல வியாதியையும் சரி செய்யும். சூட்டினால் உண்டாகும் கண் கட்டிகள் மறைய, சந்தன விழுதை எலுமிச்சை சாற்றில் கலந்து இரவில் கண் கட்டிகளின் மேல் தடவி வந்தால் குணமாகும்.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் நெல்லிகாய் சாற்றுடன் சிறிது சந்தன விழுதை சேர்த்து தினமும் தொடர்ந்து குடித்துவந்தால் நீரிழிவு பிரச்சினை தீரும்.

வெள்ளை சந்தனத்தூளை நீரில் இட்டு மூன்றில் ஒரு பங்கு நீராக கொதித்தது அருந்திவந்தால் இதயபம் படபடப்பு, ஜுரம், உடல் மந்தம் அனைத்தும் குணமடையும்.

சந்தனத்தை மருதாணி விதைகளில் கலந்து சாம்பிராணி போட்டுவர வீடுகளில் காற்று தூய்மையாகி மனம் தெளிவுறும்.

சந்தனக்கட்டை எண்ணெய் போல, சந்தன விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயும் உடல் நலனுக்கு பயனாகிறது.

சந்தன எண்ணெய், பக்க வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற வாத வியாதிகளுக்கு வெளிப்பூச்சு எண்ணையாகவும் உள் மருந்தாகவும் பயன் தருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button