கூந்தல் பராமரிப்பு

முடி உதிர்விற்கான காரணங்கள் என்ன?..

முடி உதிர்வால் நலிவடைந்த முடி அல்லது வழுக்கை விழுவது என பல பிரச்சினைகளை எல்லோரும் எதிர்நோக்கி வருகின்றீர்கள். முடி உதிர்வு என்பது தினந்தோறும் நடைபெறும் செயற்பாடே. அதிகமான முடி உதிர ஆரம்பித்தால் உடனே அழகு நிலையங்களிற்குச் சென்று அதற்கான சிகிச்சை பெறுவதில் தான் பலரும் நாட்டம் காட்டி வருகின்றனர்.

ஆனால் இவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதனால் முடி உதிர்விற்கான காரணத்தை கண்டறிந்து அதற்குரிய பராமரிப்பை எடுத்துக் கொள்வதே சிறாந்தது.

hairfall

முடி உதிர்விற்கான காரணங்கள் என்ன?
• ஊட்டச்சத்தற்ற உணவு.
• போதியளவு விட்டமின்கள் கிடைக்காமை.
• பரம்பரை காரணிகள்.
• அதிகப்படியான மன அழுத்தம்.
• படபடப்பு மற்றும் கவலைகள்.
• தொடர்ச்சியாக தைபோயிட், இரத்தசோகை, வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படுதல்.
• சரியான இரத்த ஒட்டம் இன்மை.
• சுத்தமற்ற தலை.

முடி உதிர்வை தடுப்பது கடினமான செயல் அல்ல. அதற்கான காரணத்தை சரியாக கண்டறிந்து கொண்டு தீர்வைப் பெறுவது எளிதானது.

முடி உதிர்விற்கு முதல் காரணியாக இருப்பது போதியளவு ஊட்டச்சத்தின்மையே. இதனால் முடி உதிர்வு, உடைதல், வளர்ச்சி இன்மை போன்றவை ஏற்படும்.

உங்கள் முடி விரைவாகவும் அடர்த்தியாகவும் வளர்வதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியமானது.

1. புரோட்டின் சத்திற்கு முட்டை.
முடி புரோட்டினால் உருவானது. முட்டையில் அதிகளவான புரோட்டின் உள்ளதனால் முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

2. இரும்புச் சத்திற்கு பச்சை கீரைகள்.
இரும்புச்சத்து முடியின் வேர்களிற்கு அத்தியவசியாமான கனியுப்பு. இதன் அளவு குறைவடையும் போது முடி வேர்கள் வலு இழந்து முடி உதிர்வு ஏற்படுத்தும். பச்சை இலைகளில் அதிகளவான இரும்புச் சத்து காணப்படுகின்றது.

3. விட்டமின் சிக்கு சிட்றஸ் பழங்கள்.
உடலால் இரும்புச்சத்துக்கள் உறிஞ்சிக் கொள்வதற்கு விட்டமின் சி முக்கியமானது. தினமும் ஒரு எலுமிச்சை விட்டமின் சி சத்திற்கு போதுமானது. அதுமட்டுமல்லாது தோடம்பழத்திலும் அதிகளவான விட்டமின் சி உள்ளது. இவை கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்வதுடன், முடி வேரின் பகுதிகளிற்கு ஊட்டச்சத்தை வழங்குகின்றது.

4. ஒமேகா-3 கொழுப்பமிலத்திற்கு கடலைகள்.
ஒமேகா-3 முடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதுடன் அடர்த்தியான முடியை வளரச் செய்கின்றது. பாதாம், வால்நட்ஸ், ஆளி விதை போன்றவற்றால் அதிகளவான ஒமேகா-3 காணப்படுகின்றது.

5. விட்டமின் ஏக்கு கரட்.
கரட்டில் உள்ள விட்டமின் ஏ தலையில் உள்ள இயற்கையான சீபம் எண்ணெய்யை உற்பத்தி செய்து முடி வளர்ச்சியை தூண்டுகின்றது. இதனால் வேர்கள் ஆரோக்கியமானதாகவும், முடி வளர்ச்சியும் விரைவாக நடைபெறும்.

6. விட்டமின் ஈக்கு அவகோடா.
விட்டமின் ஈ இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடிகளின் வேர்ப்பகுதிகளிற்கு ஊட்டச்சத்தை வழங்குவதுடன் முடியை வளரச் செய்கின்றது. அத்துடன் pH அளவையும் சமநிலையாக பேணும். அவகோடாவில் விட்டமின் ஈ அதிகளவில் உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button