ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

இரவு 7 மணிக்குள் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்….

இரவு 7 மணிக்குள் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்’ என்று காலக்கெடுவை வலியுறுத்தியிருக்கிறது ஒரு புதிய ஆய்வு. இது தொடர்பாக 700-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், இரவு மிகவும் தாமதமாகச் சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

7 மணிக்கு மேல் சாப்பிட்டால்?

10 tips lechuga
* ரத்த அழுத்த பாதிப்புகள் ஏற்படும்.

* மன அழுத்தத்தை உருவாக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படும்.

* வளர்சிதை மாற்றத்தின் வேகம் குறைந்து, உடல் பருமன், மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

* இரவு உணவைத் தாமதமாகச் சாப்பிடுவது, உடலை இரவில் அதிக விழிப்புடன் வைத்திருக்கும். சிலர் உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிடும் பழக்கத்தைக்கொண்டிருப்பார்கள். அதுவும் தவறு.

7 மணிக்கு முன்னர் சாப்பிட்டால்?

* மாரடைப்பு, பக்கவாதம் வரும் வாய்ப்புகள் குறையும்.

* இரவு உணவைச் சீக்கிரமே முடித்துவிட்டால், உடலுக்குப் போதுமான ஓய்வு கிடைக்கும்.

* உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

* நெஞ்செரிச்சலும் வயிற்று உப்புசமும் தவிர்க்கப்படும்.

* தூக்க சுழற்சி முறைப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button