24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
banana tea recipe
சமையல் குறிப்புகள்அறுசுவைஆரோக்கிய உணவுஆரோக்கியம்

வாழைப்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் டீ பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது….

முக்கனிகளில் ஒன்றான வாழையின் பயன்களை பற்றி நாம் நன்கு அறிவோம். சுவை மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடிய இந்த வாழைப்பழம் எளிதில் வாங்கக்கூடியதாகவும், எப்பொழுதும் கிடைப்பதாகவும் இருக்கிறது. வாழைப்பழத்தை பல்வேறு உணவுகளில் பயன்படுத்தினாலும் நாம் அறியாத ஒரு முறை உள்ள அதுதான் வாழைப்பழ டீ.

ஆம் வாழைப்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் டீ பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம் என இதில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் எண்ணற்றவை. இந்த பதிவில் வாழைப்பழ டீ எப்படி தயாரிக்கலாம் என்பதையும், அதனால் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.

banana tea recipe

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
வாழைப்பழ தேநீரில் உள்ள முக்கியமான சத்து என்னவெனில் பொட்டாசியம் ஆகும், இது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இதுமட்டுமின்றி பொட்டாசியம் உடலில் உள்ள திரவ சமநிலையை கட்டுப்படுத்துவதுடன் தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் அழுத்தத்தை குறைத்து கார்டியோவாஸ்குலர் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது
வாழைப்பழ டீயில் உள்ள டிரிப்டோபான், செரோடோனின் மற்றும் டோபமைன் சத்துக்கள் தூக்கத்தின் அளவை அதிகரிக்க பயன்படும்.

மேலும் இன்சொமேனியா ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. தடையில்லா தூக்கத்தை வழங்குவதில் வாழைப்பழ டீ முக்கியபங்கு வகிக்கிறது. நிம்மதியான தூக்கம் உங்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படுவதை குறைக்கிறது. தூக்கமின்மை உங்கள் மூலையில் பீட்டா அமைலாய்டு சுரப்பை அதிகரிக்கும், இதுதான் அல்சைமர் ஏற்பட காரணமாகும்.

மனச்சோர்வை நீக்குகிறது
வாழைப்பழ டீயில் உள்ள டோபமைன் மற்றும் செரோடினின் உங்கள் ஹார்மோன் அளவை சீராக்கவும், உங்கள் மனநிலையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இவை மகிழ்ச்சியை கட்டுப்படுத்தக்கூடிய நரம்பியல் கடத்திகளாகும். உங்களுக்கு தொடர்ந்து மனசோர்வு இருந்தால் உங்கள் உணவில் வாழைப்பழ டீயை சேர்த்துக்கொள்வது நல்லது.

எலும்புகளின் ஆரோக்கியம்

உங்கள் எலும்புகளை இரும்பாக மாற்ற வாழைப்பழ டீ குடிக்க வேண்டியது அவசியமாகும். வாழைப்பழ டீயில் உள்ள ஊட்டச்சத்துக்களான மாங்கனீசு மற்றும் மக்னீசியம் இரண்டும் உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். குறிப்பாக இது எலும்புகளில் ஏற்படும் ஆஸ்டாபோரோசிஸ் நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

வாழைப்பழ டீயில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும். இந்த இரண்டு வைட்டமின்களுமே ஆன்டி ஆக்சிடண்ட்களாக செயல்படக்கூடியவை. அஸ்கார்பிக் அமிலம் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தி தூண்டுகிறது, மற்றும் வைட்டமின் ஏ நேரடியாக விழித்திரை ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. மேலும் கண்புரைகளின் வளர்ச்சியை தடுக்கிறது.

எடை குறைப்பு
எடை குறைப்பிற்கு வாழைப்பழ டீயை பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் சில ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளது. இந்த சத்துக்கள் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன் உங்களை திருப்தியாக உணர வைக்கிறது. இது உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

தயாரிக்கும் முறை
வாழைப்பழ டீ தயாரிக்க தேவையானவை ஒரு நல்ல நாட்டு வாழைப்பழம், ஆறு கிளாஸ் தண்ணீர் மற்றும் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும்போதே அதில் வாழைப்பழத்தை போட்டு வைக்கவும், இந்த தண்ணீரில் வாழைப்பழத்தை 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் இந்த பழத்தை எடுத்துவிட்டு தண்ணீரை வடிகட்டவும். இதில் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும்..

Related posts

உடல் பருமனை குறைக்குமா கிரீன் டீ?அதை எவ்வாறு அருந்த வேண்டும்?

nathan

சைவக் கேக் (Vegetarian Cake)

nathan

சேனைக்கிழங்கு வறுவல்

nathan

பச்சை பூண்டு தரும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

nathan

எந்த டியோடரண்டை பயன்படுத்தி வியர்வை வாடையை போக்கலாம்…..

sangika

பரோட்டா!

nathan

உங்களுக்கு தெரியுமா ஏன் குளிர்காலத்தில் அவசியம் கமலா ஆரஞ்சு சாப்பிடணும் தெரியுமா?

nathan

தண்ணீரில் ஊறவைத்த பாதாம் நல்லதா?

nathan

சூரியகாந்தி எண்ணெய் சமையலுக்கு நல்லதா?

nathan