அறுசுவை சமையல் குறிப்புகள்

காரத்துடனும், கூடுதல் ருசியுடனும் அப்பளம்…

தேவையானப்பொருட்கள்:

புழுங்கல் அரிசி – ஒரு கப்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
வாழை இலை – தேவையான அளவு.


செய்முறை:

புழுங்கல் அரிசியை முதல் நாள் இரவே கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். (அரைப்பதற்கு முன்பு 40 நிமிடங்கள் அரிசியை ஊற வைக்கவும்), மறுநாள் காலை மாவுடன் உப்பு, சீரகம் சேர்க்கவும்.

இட்லிப்பானையில், தட்டில் வாழை இலையை வைத்து, அதில் ஒரு கரண்டியால் மாவை வட்ட வடிவில் ஊற்றி வைத்து 2 நிமிடம் கழித்து எடுத்தால்… இலை அப்பளம் தயார். இதே மாதிரி முழு மாவையும் ஊற்றி எடுத்து வெயில் காய வைத்து, இரண்டு மணி நேரத்தில் வாழை இலையை விட்டு எடுத்து விடலாம்.

எடுத்த அப்பளத்தை துணியில் போட்டு, வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். 4 தினங்கள் பகலில் இவ்வாறு காயவைத்து எடுக்கவும். வாழை இலை அப்பளத்தை அதிக அளவில் செய்து வைத்துக்கொண்டால், ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.

இதை எண்ணெயில் பொரித்தோ, தணலில் சுட்டோ பயன்படுத்தலாம்.

குறிப்பு: பச்சை மிளகாய் – கசகசாவை அரைத்து, அப்பளம் தயாரிக்கும் மாவில் சேர்த்தால்… சற்று காரத்துடனும், கூடுதல் ருசியுடனும் அப்பளம் இருக்கும்.

Related posts

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா

nathan

சண்டே ஸ்பெஷல்: ஆந்திராவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஸ்பைஸி சிக்கன்

nathan

அசைவ உணவுகள் சாப்பிடுபவரா? இதோ சில டிப்ஸ்

nathan