ஆரோக்கியம்ஆரோக்கிய உணவுஆரோக்கியம் குறிப்புகள்மருத்துவ குறிப்பு

கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்.

கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின்ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும். கோவைக்காயை மலிவான விலைக்கு கிடைக்கும்.

கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்.

கோவை சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மையுடையது. மேலும் இரத்த சர்கரையை குணப்படுத்த வல்லது.

கோவைக் கிழங்குச் சாறு 10 மி.லி. காலை மட்டும் குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா) இரைப்பு, கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும்.

kovakkai

கோவைக்காயை துண்டு துண்டாக வெட்டி, வெய்யிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும்.

சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார்.

இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்.

நிறையப் பேர் கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுங்கி விடுகிறார்கள். நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்பமுடையதாகும்.

பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். கோவைக்காயை பீன்ஸ் போல பொரியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்குமே.

ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரவையில் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். முக்கியமாக முற்றின கோவைக்காய் வாங்ககூடாது. பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button