ஆரோக்கியம்

நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதோடு பார்வைத்திறன் அதிகரிக்க….

கரந்தைப்பூ… சிவகரந்தை, கொட்டைக்கரந்தை, செங்கரந்தை, கருங்கரந்தை, நாறும்கரந்தை, குத்துக்கரந்தை, சிறுகரந்தை, சுனைக்கரந்தை, சூரியக்கரந்தை, விஷ்ணுக்கரந்தை எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்தக் கரந்தைப்பூ மூன்று வகைப்படும். விஷ்ணுகரந்தை நீல நிறத்திலும் சிவகரந்தை வெள்ளை நிறத்திலும் பூக்கும்.

கொட்டைக்கரந்தை என்பது நெருஞ்சில் காயைப்போன்று கூட்டுக்காயாக இருக்கும். இவற்றில் கொட்டைக்கரந்தையின் மருத்துவக்குணம் அதிசயிக்கத்தக்கது.

ஸ்பேரான்தஸ் இண்டிகஸ் (Sphaeranthus indicus) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட கொட்டைக்கரந்தை, ஈரமான இடங்களில் நெல் வயல்களில் களைச்செடியாகவும், வரப்புகளின் ஓரங்களிலும் வளரக் கூடியது. இதன் தாயகம் ஆப்பிரிக்கா.

gorakhmudi

கொட்டைக்கரந்தை செடிகள் பூப்பூப்பதற்கு முன்பாக அவற்றைப் பிடுங்கி, நிழலில் உலரவைத்துப் பொடியாக்கி, ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து, கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், உள்ரணம் மற்றும் தோல் நோய்கள் சரியாகும்.

இதே பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு எடுத்து, பால், கற்கண்டுடன் சேர்த்துத் தொடர்ந்து ஆறு மாதங்கள் வரை இரவில் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலப்படும்.

தினமும் ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு எடுத்துத் தேனுடன் சேர்த்துச் சாப்பிட, நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதோடு பார்வைத்திறன் அதிகரிக்கும்.

கொட்டைக்கரந்தைப் பொடியுடன் அதே அளவு கரிசலாங்கண்ணிப் பொடியைச் சேர்த்துத் தேனுடன் குழைத்துச் சாப்பிட்டுவந்தால், இளநரை விலகுவதோடு உடல் பலம்பெறும்.

உடல் உறுப்புகளுக்கு வலிமை தரும் இந்த மூலிகை, பல்வேறு மருத்துவத்துக்கும் பயன்படுகிறது.

கொட்டைக்கரந்தையின் பட்டையை அரைத்து மோருடன் கலந்து சாப்பிட்டுவந்தால், மூலம் குணமாகும்.

தோல் நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் இதன் இலை களைக் காயவைத்துப் பொடியாக்கி ஒரு வேளைக்கு அரை டீஸ்பூன் வீதம் தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கொட்டைக்கரந்தை இலைச்சாற்றுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி, தலைக்குத் தேய்த்து வந்தால் கூந்தல் கருகருவென வளரும்.

கொட்டைக்கரந்தையின் முழுச்செடியை கஷாயமாக்கி, அதனுடன் சீரகத்தைப் பொடித்துப்போட்டுச் சாப்பிட்டு வந்தால், வயிற்றுக்கோளாறுகள் குணமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button