அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

இரண்டே நாளில் முகத்தில் உள்ள கரும் தழும்புகளை போக்க ஜாதிக்காய்…

ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஜாதிக்காய்க்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.

ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

அதேபோல் ஜாதிக்காயைன் சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.

அதே போல் அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிர்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

மிகவும் வாசனை நிறைந்த இந்த ஜாதிக்காய் அதிக மருத்துவ குணம் கொண்டது.

41080 13213 17426

பல்வேறு இயற்கை வைத்திய முறைகளில் முதன்மையான இடத்தைப் பிடிப்பது இந்த ஜாதிக்காய் தான்.

ஜாதிக்காயை உள்ளுக்கும் கொடுக்கலாம், வெளியிலும் தடவி நிவாரணம் பெறலாம்.

பிறந்த குழந்தைகளுக்கு, தாய்க்கு இணையாக இந்த ஜாதிக்காய் பல்வேறு வகைகளில் உடல் நலனைக் காக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஜாதிக்காய் குழந்தைகளுக்கு கை முட்டி மற்றும் முழங்கால் பகுதிகளில் சொரசொரப்பாக இருக்கும். இதற்கு ஜாதிக்காயை நீரில் உரைத்து அந்த இடத்தில் தடவி வர குணமாகும்.

அம்மை நோய் கண்டவர்கள், ஜாதிக்காய், சீரகம், அத்தி பிஞ்சு, பருத்திப் பிஞ்சு இவற்றை சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர கொப்புளங்கள் வாடும்.

ஜாதிக்காயைப் பொடி செய்து அதனுடன் பிரண்டை உப்பினைக் கூட்டி, உட்கொண்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

ஜாதிக்காய் தைலத்தை பூசிவர பல்வலி குணமாகும்.

ஜாதிப் பத்திரியை நீர்விட்டு காய்ச்சி குடித்து வர சுரம், பெருங்கழிச்சல், நீர் நீராய் ஏற்படுகின்ற பேதி முதலியன குணமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button