அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

ஆசைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் மிக சிறந்த நண்பனை கவனிக்காது விடலாமா?..

நமது ஆசைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் மிக சிறந்த நண்பன் நமது பாதங்கள் தான். நாம் நினைத்த நேரத்தில் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு நம்மை அழைத்து செல்பவை நமது பாதங்கள் தான். பாதத்திற்கு என்று எப்போதும் சிறப்புகள் உண்டு.

ஆனால், நாம் தான் அதனை கண்டு கொள்ளாமல் இருந்து விடுவோம். குறிப்பாக பெண்களை விட ஆண்களே இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமில்லாமல் இருக்கின்றனர். பாதங்களை மென்மையாக வைத்து கொள்ளவும், பாதத்தில் உள்ள புண்கள், கிருமிகளை சரி செய்யவும் நச்சுனு 6 டிப்ஸ்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம் நண்பர்களே.

பாத பிரச்சினைகள்

மற்ற உறுப்பை காட்டிலும் நாம் கால்களை அதிகமாகவே பயன்படுத்துகின்றோம். இதனால் பல வித பாதிப்புகளை கால்கள் சந்திக்கின்றன. குறிப்பாக பாதம் சார்ந்த பிரச்சினைகள், நோய் தொற்றுகள், வெடிப்பு, வலி போன்றவை ஏற்படுகிறது. நமது பாதங்கள் இவை அத்தனையையும் பொறுத்து கொண்டே இருந்து, இறுதியில் பெரிய ஆபத்தை தரும்.

feet1

அழகான பாதத்திற்கு

பாதங்களை அழகாக வைத்து கொள்ள இந்த டிப்ஸ் நச்சுனு உதவும். இதற்கு தேவையானவை…

தேன் 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

செய்முறை :-

தேனையும் எலுமிச்சையையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை பாதங்களில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் பாதத்தை கழுவவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் பாதங்கள் அழகாகும்.

பாத குளியல்

பாதத்தை சுத்தமாகவும், நோய்கள் அண்டாமலும் இருக்க இந்த டிப்ஸ் நன்கு உதவும். அதற்கு தேவையானவை…

பேக்கிங் சோடா 5 டீஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் மிதமான சூடு நீர்

சிறிது லாவெண்டர் எண்ணெய்

செய்முறை :-

முதலில் மிதமான சூடு தண்ணீரில் பேக்கிங் சோடா, லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். அடுத்து இந்த நீருக்குள் கால்களை 20 நிமிடம் வரை அப்படியே வைத்து கொள்ளவும். பிறகு பாதத்தை நன்கு தேய்த்து கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் பாதங்கள் மென்மையாக மாறும்.

ஓரங்களில் உள்ள அழுக்குகளை நீக்க

பெரும்பாலும் நம்மில் பலர் பாதங்களின் ஓரத்தில் உள்ள அழுக்குளை நீங்காமல் அப்படியே வைத்திருப்போம். இது நாளடைவில் பலவித பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தும். இந்த பிரச்சினையில் இருந்து விடுபட ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் வெது வெதுப்பான நீர், 1 டேபிள்ஸ்பூன் உப்பு ஆகியவற்றை கலந்து, கால்களை அதனுள் 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும்.

இந்த டிப்ஸ் நகங்களின் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கி விடும்.

தேங்காய் எண்ணெய்

எப்போதும் உங்கள் பாதங்களை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள வேண்டும். வறட்சியாக வைத்திருந்தால் பல வித பாதிப்புகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர தொடங்கும்.

குறிப்பாக வெடிப்புகள் நிரந்தரமாகவே நம்முடனே தங்கி விடும். இதனை சரி செய்ய, தேங்காய் எண்ணெய்யை பாதங்களில் தடவி கொள்வதே சிறந்தது.

நகம் வெட்டுதல்

நாம் பொதுவாக வளைந்த நிலையில் தான் நமது நகத்தை வெட்டுவோம். ஆனால் இது சரியான முறை அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர். நகம் வெட்டும் போது அதனை கட்டாயம் கோடு போன்று நேராக வெட்ட வேண்டும். இல்லையேல் எங்கையாவது இடித்து காயங்களை ஏற்படுத்தும்.

செருப்பைகளை பகிர வேண்டாம்..!

பாதங்களில் வர கூடிய அதிக நோய்கள் செருப்புகளால் தான் வருகிறது. நாம் வேறொருவருடைய செருப்பை மாற்றி போடுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இனி மற்றவரின் செருப்பையோ, ஷூவையோ மாற்றி போடாதீர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button