ஆரோக்கியம்எடை குறைய

தொப்பையை குறைக்கும் மந்திர சக்தி கொன்ட அன்னாசிப்பழம்!

slimbody-1-297x300பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.
சுவைமையும், மணமும் நிறைந்த அன்னாச்சி பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன..
இன்று பெரும்பாடாய் மாறும் தொப்பை குறைக்க அன்னாச்சி பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும். அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும்.
அன்னாசிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும் கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button