மருத்துவ குறிப்புஆரோக்கியம்

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? கட்டாயம் இத படிங்க!

பன்றிக் காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது?

இன்றைய சூழ்நிலையில் சாதாரண காய்ச்சல் இருந்தால் கூட பன்றி காய்ச்சலாக இருக்குமோ என பதட்டமும், அச்சமும் மக்களிடம் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. பன்றி காய்ச்சல் ஏற்படுத்தும் ‘எச்1 என்1’ என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக்கூற்றை அடிப்படையாக கொண்டு மனிதர்களை தொற்றக்கூடியவை.

ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் இவ்வைரஸ் கிருமியானது காற்றின் மூலம் பரவி மனிதரை தாக்கிய பின் மனிதர்களின் உடலுக்குள் மரபணு மாற்றம் பெற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

h1n1 swine

பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

கடுமையான காய்ச்சல், தொண்டை வலி, இருமல், வயிற்றுப்போக்கு, மூச்சடைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?

குழந்தைகளை பொது இடங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த இடங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

வீட்டில் உறவினர்களிடையே காய்ச்சல், இருமல், தும்மல் இருந்தால் குழந்தைகளை அவர்கள் அருகில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க நம்மை நாம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். பிறரிடம் கை கொடுப்பதை விட வணக்கம் சொல்வது நல்லது.

எந்த வயதில் இருந்து தடுப்பூசி போட்டு கொள்ளலாம்?

குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு மேல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இத்தடுப்பூசியின் பலனானது ஓராண்டு வரை நீடிக்கும்.

ஆண்டு தோறும் மரபணுக்கள் மாறி கொண்டே இருப்பதால் அதற்கு ஏற்றபடி தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button