சமையல் குறிப்புகள்​பொதுவானவை

சமைக்கும் போது இவற்றை மறந்திடாதீர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவை….

அலுமினியம்

அலுமினியம் என்பது மிகவும் பிரபலமான, விலை குறைவான, மிகவும் குறைவான பராமரிப்பே தேவைப்படும் ஒரு பாத்திரம் ஆகும். அதனாலேயே இது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது விரைவில் அதிக சூடாகக்கூடிய ஒரு பாத்திரம் ஆகும்.

கீறல் விழாத, அனாடைஸ் செய்யப்பட்ட அலுமினிய பாத்திரம் சமைப்பதற்கு மிகச்சிறந்த தேர்வாகும். அலுமினிய பாத்திரத்துல சமைக்கும்போது உங்கள் உடலுக்குள் செல்லும் அலுமினியத்தின் அளவு மிகக்குறைவுதான்.

ஆனால் அமிலத்தன்மை அதிகமுள்ள தக்காளி போன்ற உணவுகளை சமைக்கும்போது அது அதிகளவு உணவுடன் கலக்கும். இதனால் அல்சைமர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

000
motion chefs of a restaurant kitchen

இரும்பு பாத்திரம்

சமையலுக்கு ஏற்ற மிகச்சிறந்த பாத்திரங்களில் ஒன்று இரும்பு பாத்திரம். இது அதிகம் சூடாவதோடு, இதில் சமைப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறைவுதான். இதனை பயன்படுத்தி சமைக்கும்போது அது உங்கள் உணவில் சிறிது இரும்பை சேர்க்கும்.

இரும்பு பாத்திரத்தை எப்பொழுதும் சோப்பு கொண்டு கழுவாதீர்கள். இதனால் உலோகம் சிதைய வாய்ப்புள்ளது. எனவே மென்மையான துணியை கொண்டு மட்டும் இதனை சுத்தப்படுத்துங்கள்.

துருப்பிடிக்காத ஸ்டீல்

இன்று நமது சமையலறையில் இருக்கும் பாத்திரங்களில் பெரும்பாலானவை இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் செய்யப்பட்டவைதான். எளிதில் வாங்கக்கூடிய இது வெப்பத்தை உங்கள் உணவிற்கு எளிதில் கடத்தக்கூடியது.

இது எப்போதும் துருபிடிக்காது சமைப்பதற்கு மிகச்சிறந்த தேர்வு என்றால் அது இதுதான்.

பீங்கான்

இந்த பாத்திரத்தை ஒருபோதும் சமைக்க பயன்படுத்தாதீர்கள், இவை எப்பொழுதும் அலங்காரத்திற்கானவை மட்டும்தான். இந்த பாத்திரத்தில் உணவு சமைக்கும்போது அது வெளியிடும் வேதிப்பொருட்கள் பல மோசமான ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுத்தும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு இதனால் பல ஆரோக்கிய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனாமல் பாத்திரங்கள்

இது அதிகளவு பயன்படுத்தப்படுவதில்லை, இருப்பினும் இதனை சிலர் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். சில பாத்திரங்கள் எனாமல் பூச்சுடன் இருக்கும்.

இதனால் பாத்திரத்தில் கீறல்கள் விழாது அதேசமயம் வெப்பமும் நன்றாக இருக்கும். இந்த பாத்திரத்தில் சமைக்கும்போது மரக்கரண்டியை பயன்படுத்தவும்.

டெப்லான்

இப்போது அதிகம் பிரபலமாகி வரும் ஒரு பாத்திரம் என்றால் அது டெப்லான் பாத்திரம்தான். பிளாஸ்டிக் பூச்சுடன் இருக்கும் இந்த பாத்திரம் விலை குறைவாகவும், சுத்தப்படுத்த எளிதாகவும் இருப்பதால் மக்கள் இதனை அதிகம் உபயோகிக்க தொடங்கியுள்ளனர்.

ஆனால் இது நச்சுத்தன்மை வாய்ந்த ஒன்று, இதில் சமைக்கும் போது அதில் கலக்கும் பிளாஸ்டிக்கும், அதனால் ஏற்படும் புகையும் உங்களுக்கு சுவாசக்கோளாறுகளையும், நுரையீரல் பிரச்சினைகளையும் உண்டாக்கும். இதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தாமிரம்

தாமிர பாத்திரங்கள் நமக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது, ஆனால் தற்போது ஸ்டெயின்லெஸ் பாத்திரத்தில் தாமிர பூச்சுடன் பாத்திரங்கள் கிடைக்கிறது. இந்த பாத்திரத்தில் சமைக்கும்போது அமிலக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் இதற்கு தொடர்ச்சியான மற்றும் சீரான பராமரிப்பு தேவைப்படும். இவை மட்டுமின்றி சமைக்கும் பாத்திரத்தில் கவனிக்க வேண்டியவை நிறைய உள்ளது.

பாத்திரம் நல்ல நிலையில் உள்ளதை உறுதிசெய்து கொள்ளுங்கள்

எந்த பாத்திரமாக இருந்தாலும் அன்டனி உபயோகிக்கும் முன் அதன் உறுதித்தன்மையை பரிசோதிக்க வேண்டியது அவசியம். பாத்திரத்தில் விரிசல் இருக்கிறதா? கைப்பிடிக்கும் இடம் சுத்தமாக இருக்கிறதா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.

ஏனெனில் நாம் கை வைக்கும் இடத்தில்தான் அதிகளவு பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. நான்ஸ்டிக் பூச்சு இல்லாத பாத்திரத்தை பயன்படுத்தக்கூடாது.

மீதமுள்ள உணவை கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவேண்டும்

அலுமினியம் அல்லது பிளாஸ்டிக் எதுவாக இருந்தாலும் மீதமுள்ள உணவை அதில் வைக்கக்கூடாது. அலுமினியம் காலப்போக்கில் உடையக்கூடியது, குறிப்பாக கேன் வடிவ அலுமினிய பாத்திரம் விரைவில் உடைந்துவிடும்.

பிளாஸ்டிக் பாத்திரத்தில் உணவை வைக்கும்போதும், சூடுபண்ணும்போதும் அது உடலுக்கு கேடுவிளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடும்.

அமில உணவுகள்

அமிலம் நிறைந்த உணவுகளான தக்காளி, எலுமிச்சை, வினிகர் போன்ற பொருட்களை சமைக்கும்போது அவை பாத்திரங்கள் வெளியிடும் உலோகத்தின் அளவை அதிகரிக்கிறது. இதுபோன்ற உணவுளை இரும்பு பாத்திரத்தில் சமைப்பது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button