முகத்தில் உள்ள கருமையை நீக்க இனி கிரீம்கள் தேவையில்லை….

பலருக்கு நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாக இருக்கும். இளமையாக இருப்பதற்கு பல வகையான மாத்திரைகளும், மருந்துகளும் கூட கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை எளிய முறையில் செய்து தருகிறது பிளம்ஸ் பழங்கள். இவை முக அழகு முதல் இளமை பிரச்சினை வரை அனைத்தையும் சரி செய்கிறது. வாங்க, பிளம்ஸ் பழத்தை வைத்து இளமையாக நீண்ட காலம் இருப்பது எப்படி என்பதை தெரிந்து பயன் பெறுவோம்.

சுவைமிக்க பழம்..!

இந்த் பிளம்ஸ் பழம் மற்ற பழங்களை விட தனி சிறப்பு பெற்றது. இவை  உடல் நலத்தையும், முக ஆரோக்கியத்தையும் சேர்த்தே காக்கும். இந்த பழத்தில் வைட்டமின் எ, பீட்டா கரோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளதாம்.

கருமையை நீக்க

முகத்தில் உள்ள கருமையை நீக்க இனி கிரீம்கள் தேவையில்லை. மாறாக இந்த பிளம்ஸ் குறிப்பே போதுமானது.

தேவையானவை :-

தயிர் 1 ஸ்பூன்

பிளம்ஸ் 3

செய்முறை :-

முதலில் பிளம்ஸ் பழங்களை நீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு அரைத்து கொண்டு தயிருடன் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த் குறிப்பை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் கருமை நீங்கி விடும்.

இளமையான முகத்தை பெற

முகம் பார்க்க மிக இளமையாக இருக்க பிளம்ஸ் வைத்து செய்கின்ற அழகியல் குறிப்பு நன்கு உதவும். இது உங்கள் முகத்தில் உள்ள செல்களை புத்துணர்வூட்டி அதிக காலம் இளமையாக வைத்து கொள்ளும்.

இதற்கு தேவையானவை…

தேன் 2 ஸ்பூன்

பிளம்ஸ் 2

செய்முறை :-

பிளம்ஸ் பழத்தை அரைத்து கொண்டு அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் நீண்ட கால இளமையை பெறலாம்.

சுருக்கங்கள் மறைய

முகத்தில் உள்ள சுருக்கங்கள் தான் நம்மை மிக வயதானவரை போன்று காட்டுகிறது. இதனை சரி செய்ய இந்த குறிப்பு பயன்படும்.

தேவையானவை :-

வெள்ளரிக்காய் ஜுஸ் 2 ஸ்பூன்

ரோஸ் நீர் 1 ஸ்பூன்

பிளம்ஸ் 2

செய்முறை :-

முதலில் பிளம்ஸை நன்கு அரைத்து கொண்டு அதனுடன் ரோஸ் நீர் அல்லது வெள்ளரிக்காய் சாற்றை கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் பூசி மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த குறிப்பு உங்கள் சுருக்கங்களை போக்கி விடும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்க

உங்களின் முடி நன்கு வளர இந்த குறிப்பு போதும்.

தேவையானவை :-

தயிர் 3 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

பிளம்ஸ் 3

செய்முறை :-

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து பிளம்ஸை அரைத்து கொண்டு, இவற்றுடன் கலந்து தலையில் தடவவும். 30 நிமிடம் கழித்து தலையை அலசவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் முடி நன்கு வளரும்.

Leave a Reply