பெண்களே அவதானம் உங்களுக்கு இவ்வாறான அறிகுறி உண்டா?

இலங்கையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயே முதலிடம் வகிக்கின்றது. பெண்களே ஆண்களைவிட அதிகளவு மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் மார்பகத்தில் உள்ள கட்டிகள் யாவும் புற்றுநோய் கட்டிகள் அல்ல. வயதுக்கு ஏற்ப கட்டிகளுக்கான காரணங்களும் வேறுபடுகின்றன.

எச்சரிக்கை குணங்குறிகளாவன :

  • மார்பகத்தில் ஒரு தடிப்பு / வீக்கம் / கட்டி காணப்படல்
  • மார்பக்தினுடைய தோல் இழுபட்டு / சுருங்கி இருத்தல்
  • முலைக்காம்பின் தோலில் மாற்றம் ஏற்படல்
  • ஒரு மார்பகத்தினுடைய அளவு வழமைக்கு மாறாக பருத்தல்
  • மார்பக முலைக்காம்பில் ஒரு புதிய உள்ளிறக்கம் தோன்றுதல்
  • நிணநீர் கணுக்கள் பெருத்தல்
  • ஒரு மார்பகம் வழமைக்கு மாறாக மற்றதிலிருந்து கீழறங்கிக் காணப்படல்
  • மேற்கையில் வழமைக்கு மாறான வீக்கம்.
  • வழமைக்கு மாறாக முலைக்காம்பில் இருந்து தெறிவற்ற நிறத்துடன் / குருதிக் கசிவு காணப்படல் இந்தக் குணங்குறிகள் ஏதாவதுதொன்று காணப்பட்டால் வைத்தியரை உடனடியாக நாடவும்.

ஆபத்துக்கான காரணிகளாவன :

பரம்பரைக்காரணி, மிகக் குறைந்த வயதில் மூப்படைதல், கூடிய வயதில் மாதவிடாய் நிற்றல், பிந்திய வயதில் முதற்கர்ப்பம் தரித்தல், அதிக உடற்பருமன் உடையவர்கள், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்தும் பழக்கம், அதிக கொழுப்புணவை உண்ணுதல், நீண்டகாலமாக கர்ப்பத்தடை மாத்திரை பயன்படுத்துதல், இளம் வயதில் கதிர் வீச்சுக்கு உள்ளாகுதல் என்பனவாகும்.

பெரும்பாலான பெண்கள் சுயமார்புப் பரிசோதனை மூலம் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிகின்றார்கள். சுயமார்புப் பரிசோதனையானது ஒவ்வொரு மாதமும் மாதப்போக்கின் பின் ஒரு வாரத்தினுள்ளும் மாதப் போக்கு நின்றவர்கள் மாதத்தின் குறித்த ஒரு நாளிலும் செய்யலாம். கண்ணாடியின் முன் நின்றோ அல்லது படுத்திருந்தவாறோ செய்யலாம்.

கண்ணாடியின் முன் நின்றவாறு கைகளைத் தொங்க விட்டபடியும், மேலே உயர்த்தியவாறு, கைகளை இடுப்பில் வைத்தவாறும், மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள், தோலில் ஏற்படும் மாற்றம், கட்டிகள், முலைக்காம்பின் தன்மை, சமச்சீர்த்தன்மை என்பவற்றை அவதானித்தல் வேண்டும்.

பின்னர் தொடுகை மூலம் பரிசோதித்தல் வேண்டும். வலது மார்பை சோதிப்பதாயின் வலதுகையை மேலே உயர்த்துதல் வேண்டும். பின் இடது கையினால் பரிசோதித்தல் வேண்டும்.

இடது கையின் விரல்களில் நடுப்பகுதியையே பாவித்தல் வேண்டும். உள்ங்கையையோ அல்லது விரல் நுனியையோ பாவித்தலாகாது.

இடது கையை வலது மார்பின் ஒரு பகுதியில் வைத்தல் வேண்டும். பின்னர் சிறிய வட்டமாக கைவிரல்களினால் தடவுதல் வேண்டும். மணிக் கூட்டுத்திசை வழியாக முழு மார்பையும் பரிசோதித்தல் வேண்டும்.

மார்பகமானது கமக்கட்டுவரை பரந்துள்ளது. எனவே கட்டாயமாக கமக்கட்டு பகுதியைப் பரிசோதித்தல் வேண்டும். நிணநீர்க்களுக்களுக்குள் வீக்கமடைந்திருப்பின் உணரப்படும்.

முலைக்காம்பை அழுத்தி திரவக் கசிவு உள்ளதா என அவதானித்தல் வேண்டும். சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு துளி பால்த்தன்மையான அல்லது மெல்லிய பச்சை நிறமான திரவம் வெளிவரும். சாதாரணமாக அதிகளவு இரத்தத் தன்மையான திரவம் வெளிவரமாட்டாது.

இதே ஒழுங்குமுறையில் மற்றைய மார்பையும் பரிசோதித்தல் வேண்டும். ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுதல் வேண்டும்.

மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சை முறையான வைத்தியர்களினால் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும்.

மார்பகப் புற்றுநோயானது, ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சை முறையால் ஏற்படும் அனுகூலங்களும் அதிகமாகும்.

தற்போது சிகிச்சையினால் மார்பை இழக்க வேண்டும் என்ற குறையைத் தீர்க்க மார்பைப் பேணும் சிகிச்சை முறைகளும் சேயற்கையாக மார்பைப் பொருத்துதல் போன்ற முறைகளும் கடைக்கொள்ளப்படுகின்றன.

ஆரம்ப நிலையிலேயே வைத்தியரை நாடுவோம். நீணட காலம் உயிர் வாழ்வோம்.

மணிக்கூட்டுத்திசை வழியாக முழு மார்பையும் பரிசோதித்தல் வேண்டும். மார்பகமானது கமக்கட்டுவரை பரந்துள்ளது.

எனவே கட்டாயமாக கமக்கட்டு பகுதியை பரிசோதித்தல் வேண்டும். நிணநீர்கணுக்களுக்குள் வீக்கமடைந்திருப்பின் உணரப்படும்.

Leave a Reply