அழகு குறிப்புகள்

குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. இது தான் பெரிய விடயம்..

‘‘இது மார்கழி மாசம். பனி கொட்டுது இல்லையா?
கைக்குழந்தைகளுக்கு தடுக்குனு ஜலதோஷம் பிடிச்சுக்கும்.
அதை ஓட ஓட விரட்டுறதுக்கு சிம்பிளான வைத்தியம் இருக்கு!

குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு.

அதுவும், குழந்தைக்கு ஒரு வயசு ஆகறவரை சொல்லவே வேண்டாம்… வயித்து வலிக்கு அழறதா, எறும்பு கடிச்சு அழறதானு தெரியாம நம்ம முழி பிதுங்கிடும்.

Babby

அஞ்சு மாசக் குழந்தை வயிறு வலிச்சு அழறதுனு வச்சுக்கோங்க… கடுக்காயை சந்தனம் மாதிரி உரைச்சு குழந்தையோட வயித்துல சதும்பப் பூசி விடணும்.

ஒரு வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடணும். ரெண்டே நிமிஷத்துல வலி நீங்கி, குழந்தை சிரிக்கும்.

சி ல குழந்தைகளுக்கு வாயில மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும்.

அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி, அந்த விழுதை குழந்தையோட நாக்குல தடவுனா போதும்… பிரச்னை சரியாகிடும்.

சின்னக் குழந்தை வாந்தி பண்ணினா, வசம்பை சுட்டு பொடி பண்ணி ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினா, சட்டுனு குணம் கிடைக்கும்.

வசம்புக்கு ‘பிள்ளை வளர்ப்பான்’னு பேரே உண்டு!

சூ டு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியா போச்சுனா கவலைப்பட வேண்டாம்.

ஜாதிக்காயை தாய்ப்பால்ல ரெண்டு உரை உரைச்சு புகட்டிப் பாருங்க, உடனே குணம் கிடைக்கும்.

மூணு வேளை இப்படிக் கொடுத்தா முழுவதுமா குணமாயிடும்.

ஆனா, ஒரு விஷயம் ஜாக்கிரதை! ஜாதிக்காயை ரெண்டு உரைக்கு மேல உரைக்கக் கூடாது.

டோஸ் ஜாஸ்தியாச்சுனா குழந்தைக்கு மயக்கம் வரவும் சான்ஸ் இருக்கு.

பொ துவாவே கைக்குழந்தைக்கு மாந்தம், உப்புசம்லாம் வராம இருக்க, உரை மருந்து கொடுப்போம். அதை எப்படி பண்றதுனு சொல்றேன்…

ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்கு எல்லாம் தலா ஒண்ணு எடுத்து வேகவையுங்க. அப்புறம் அதை எடுத்து வெய்யில்ல சுக்கா காய வச்சுக்கணும்.

குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டுறப்பல்லாம், இந்த மருந்துப் பொருட்களை சுத்தமான சந்தனக்கல்ல ஒரு உரை (அதிகம் கூடாது) உரைச்சு, ரெண்டு டேபிள்ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து புகட்டணும்.

ஆறு மாசக் குழந்தைனா, பத்து நாளுக்கு ஒருமுறை ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீர்ல கலந்து, ஒரு பாலாடை அளவு புகட்டினா, குழந்தைக்கு வயித்துல வாயு சேராம இருக்கும்.

பிறந்த குழந்தைக்கு தலையில நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது! தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும்.

குழந்தை தலையிலயும் உடம்புலயும் தேய்க்கத் தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வச்சு, அதுல ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் விடுங்க.

அது படபடனு கொதிச்சு அடங்கினதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க.

குழந்தைக்கு ஒரு வயசு வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். ஆனா, இந்த எண்ணெய் நல்லா போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்ச்சு குளிப்பாட்டணும்.

இப்படி செஞ்சு வந்தா குழந்தைக்கு உடம்புல சொறி, சிரங்குனு எதுவும் வராம, மேனி பட்டு போல இருக்கும்.

இ ப்போ மார்கழி வந்தாச்சு. பனி கொட்டுது! கைக்குழந்தைகளுக்கு தடுக்குனு ஜலதோஷம் பிடிச்சுக்கும்.

அப்படி சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா, கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்ல, ரெண்டு பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா…

சளி அத்தனையும் மலத்துல வெளியேறிடும்.

இப்பல்லாம் ‘குழந்தைகளுக்கு தொட்டதுக்கெல்லாம் ஆன்ட்டிபயாடிக் கொடுக்கக் கூடாது’னு பேசிக் கறாங்களே…

இந்த வைத்தியங்கள்லாம் அப்படி பக்க விளைவு எதுவுமில்லாமலே உடம்பை குணப்படுத்திடும். அதுக்கு நான் கியாரண்டி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button