வாழைப்பழத்தை இவ்வாறு சாப்பிட்டு பாருங்கள்

தேவையானப்பொருட்கள்:

வாழைப்பழத் துண்டுகள் – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 2,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்,
கடுகு, சீரகம், கறிவேப்பிலை,
பெருங்காயத்தூள் – தாளிக்கத் தேவையான அளவு,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
ஆம்சூர் பவுடர் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

வாழைப்பழத்தை வட்டமான துண்டுகளாக வெட்டவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், வாழைப்பழத் துண்டுகள், மஞ்சள்தூள், ஆம்சூர் பவுடர் சேர்த்துக் கிளறவும். இதை லேசாக தண்ணீர் தெளித்து வதக்கி… உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இது, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

Leave a Reply