அழகு குறிப்புகள்

இது மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கும் ஒரு பிரச்சினை

மனஅழுத்தம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கும் ஒரு மனரீதியான பிரச்சினை ஆகும். ஏனெனில் மனஅழுத்தம் என்பது நம்மை மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கும் ஒரு பிரச்சினை ஆகும். அனைத்து ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் ஆரம்ப புள்ளியாய் இருப்பது அதிகமான மனஅழுத்தமாகத்தான் இருக்கும்.

14

தூங்கினால் சரியாகிவிடும், மது அருந்தினால் சரியாகிவிடும் என்று நினைத்து மனஅழுத்தத்தை நாம் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது. ஏனெனில் மனஅழுத்தம் உங்களை மரணப்படுக்கையில் கூட தள்ளலாம்.

குறிப்பாக சில அறிகுறிகள் மனஅழுத்தம் உங்கள் உடல்நிலையை மோசமாக்க போகிறது என்பதை முன்கூட்டியே உணர்த்தும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.


சிவப்பு தடிப்புகள்

உங்கள் உடலில் திடீரென சிவப்பு நிற தடிப்புகள் ஏற்பட்டால் அதற்கு முக்கிய காரணம் மனஅழுத்தம்தான். உங்கள் உடல் அதிகளவு மனஅழுத்ததிற்கு ஆளானால் உங்கள் உடலில் ஹிஸ்டமைன் என்னும் வேதிப்பொருளை சுரக்கிறது.

இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்குவதால்தான் உங்கள் உடலில் தடிப்புகள் ஏற்படுகிறது. உங்கள் மனஅழுத்தம் குறையவில்லை எனில் ஒவ்வாமைகள், தடிப்புகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும்போது அதனால ஏற்படும் தடிப்புகள் மீது சோப்பு, க்ரீம் போன்றவற்றை தவிர்க்கவும்.


எடை சமநிலையின்மை

மனஅழுத்தம் கார்டிசோல் ஹார்மோனின் சுரப்பை அதிகரிக்கிறது, இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் செயல்திறனை குறைக்கிறது, மேலும் இதனால் புரோட்டின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கிறது.

இதனால் உங்கள் உடல் எடை தொடர்ந்து சமநிலையின்றி இருக்கும். மேலும் மனஅழுத்தம் உங்களை குறைவாக சாப்பிடவோ அல்லது அதிகமாக சாப்பிடவோ தூண்டும். இதனால் எடை பிரச்சினைகள் ஏற்படலாம்.


தொடர்ச்சியான தலைவலி

உங்களுக்கு தலைவலியே ஏற்படாத சூழ்நிலையில் திடீரெனெ தொடர்ச்சியாக தலைவலி ஏற்பட்டால் உங்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

மனஅழுத்தத்தால் உருவாகும் சில வேதிப்பொருட்கள் உங்கள் இரத்த நாளங்கள் மற்றும் மூலையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இதனால்தான் தலைவலி ஏற்படுகிறது. மனஅழுத்தம் உங்கள் தசைகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் கூட தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.


வயிறுக்கோளாறுகள்

மனஅழுத்தம் உங்கள் வயிற்றின் க்ளெசமிக் அளவுகளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் அதிக செரிமான அமிலம் சுரப்பதால் நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் வயிற்றுக்குள் வீக்கம் மற்றும் வாயுக்கோளாறை ஏற்படுத்துவதால் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

எப்பொழுதும் சளியுடன் காணப்படுவீர்கள்
மனஅழுத்தம் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்குவதால் நீங்கள் அடிக்கடி நோயில் விழ வாய்ப்புள்ளது, மேலும் உங்களை எளிதில் பாக்டீரியாக்கள் தாக்கக்கூடும்.

மனஅழுத்தம் உள்ளவர்கள் பெரும்பாலும் சளி அல்லது தொண்டைப்புண் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.

சமீபத்தில் நடத்திய ஆய்வின் படி மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு நோயில் விழும் வாய்ப்பு இருமடங்கு அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.


முகப்பருக்கள்

முகப்பரு உங்கள் வயது காரணமாகவோ அல்லது வேறு காரணத்தாலோ ஏற்படுகிறது என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் முகப்பரு ஏற்பட முக்கிய காரணம் மனஅழுத்தமாக கூட இருக்கலாம்.

மனஅழுத்தம் அதிகரிக்கும்போது உங்கள் உடலில் அதிக கார்டிசோல் ஹார்மோன் சுரக்கும். இதனால் உங்கள் சருமத்தில் எண்ணெய்ப்பசை அதிகரிக்கும்.

இந்த அதிகளவு எண்ணெய் உங்கள் சருமத்துளை வழியாக உள்ளே செல்லும்போது அது முகப்பருக்களை உண்டாக்கும்.


மூளை தெளிவின்மை

மனஅழுத்தம் உங்கள் மூளையின் செயல்திறனையும் குறைக்கும். அதிகளவு கார்டிசோல் சுரப்பு உங்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தும். இதனால் நினைவாற்றல் கோளாறுகள், பதட்டம், மனசோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


முடி உதிர்வு

முடி உதிர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. சில முடிகள் உதிர்வது சாதாரணமான ஒன்று, ஆனால் மனஅழுத்தம் இந்த சுழற்சியை அதிகரிக்கக்கூடும்.

குறிப்பிட்ட அளவு மனஅழுத்தம் அதிகளவு முடி உதிர்வை ஏற்படுத்தும். இதை சரிசெய்யா விட்டால் நாளடைவில் இதன் அளவு அதிகரிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button