அழகு குறிப்புகள்

இதையெல்லாம் செய்தா… சில சத்துகள் மட்டுமே அவங்களுக்கு தொடர்ந்து கிடைக்கற மாதிரியாயிடும்…..

குழந்தைக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்தெந்த வயதுக் குழந்தைகளுக்கு, என்னென்ன மாதிரி உணவு கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.

”குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு சத்துமாவுக்கஞ்சி, பருப்பு, மசித்த இட்லி, மசித்த சாதம், இடியாப்பம், வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழம், வேகவைத்த கேரட், வேகவைத்த ஆப்பிள் எனக் கொடுக்கலாம்.

fruits

ஒரு வயசுக்கு அப்புறம், பெரியவங்க சாப்பிடும் எல்லா வகை உணவுகளையுமே கொடுக்கலாம். 3, 4 வயதுக்கு மேல் லிமிட்டேஷன் இருக்கத் தேவையில்லை. எப்பவுமே பருப்பு வகைகள், கீரை வகைகள், தானியங்கள், விட்டமின் நிறைந்த உணவு வகைகள், புரதம் சார்ந்தவை, அசைவம் என பேலன்ஸ்டு டயட்டை பழக்குங்க உங்க குழந்தைக்கு.

”நாளொன்றுக்கு 3 வகை தானியங்கள், 2 – 3 வகை பருப்புகள், 2 – 3 வகை காய்கள், 2 – 3 வகை பழங்கள் (ஜூஸாக அல்லாமல் துண்டுகளாக), 2 3 டீஸ்பூன் எண்ணெயை உணவில் சேர்க்கணும்.

இப்படியான உணவு… வளமான ஆரோக்கியம், சீரான வளர்ச்சி, தேவையான நோய் எதிர்ப்புசக்தினு உங்க குழந்தைகளை முறையா வளர்க்கும்.

பிறந்ததிலிருந்து 12 வயது வரையிலான குழந்தைகளின் எடை எவ்வளவு இருக்க வேண்டும், மேலும் அவர்கள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு கலோரி மற்றும் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், தானியங்கள், நட்ஸ், இறைச்சி, மீன் உணவுகள், பால் பொருட்கள்னு குழந்தைகளை சாப்பிட வைக்கணும்.

பால்தான் சத்துனு அவங்ககூட மல்லுக்கட்டி ஒரு நாளைக்கு மூணு டம்ளர் பால் சாப்பிட வைக்கிறது; குண்டா இருக்காங்கனு மொத்தமா கொழுப்பு உணவுகள்ல இருந்து விலக்கி வைக்கிறது; நட்ஸ் நல்லா சாப்பிடுவாங்கனு, தொடர்ந்து அதையே கொடுக்கறதுனு பிடிவாதமா இருக்கக் கூடாது.

இதையெல்லாம் செய்தா… சில சத்துகள் மட்டுமே அவங்களுக்கு தொடர்ந்து கிடைக்கற மாதிரியாயிடும். சில சத்துகள் அவங்க உடம்பில் சேராமலே போகும் சூழலையும் ஏற்படுத்தும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button