அழகு குறிப்புகள்

பளபளப்பான முகம் முதல் அழகான முடி வரை உஙக்ளுக்கு வேண்டுமென்றால் இத பயன்படுத்துங்க!…

முக அழகை பெறுவது அவ்வளவு கடினமானது கிடையாது. மிக சுலபமாகவே நம் வீட்டில் இருக்கும் காய்கறிகள் பழங்களை வைத்து இந்த முக அழகை பெற்று விடலாம்.

கூடவே, முடியின் பிரச்சினைகள் அனைத்தையும் எளிதாக தீர்வுக்கு கொண்டு வந்து விடலாம். இப்படியெல்லாம் கூட செய்ய முடியுமான்னு கேக்குறவங்களுக்கு சப்போட்டாவோட அழகு குறிப்புகள கேட்ட வாய் அடைச்சு போயிடுவீங்க.

dontbreakeatright

உண்மைதாங்க, சப்போட்டாவ வச்சு பலவித விதைகளை நம்மால் காட்ட முடியும். பளபளப்பான முகம் முதல் அழகான முடி வரை உஙக்ளுக்கு வேண்டுமென்றால், அதற்கு இந்த சப்போட்டா குறிப்பை பாருங்க நண்பர்களே…

அழகு ரசியம் நிறைந்தது..!

அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் இந்த சப்போட்டாவும் ஒன்று. இதில் உள்ள வைட்டமின் எ, சி, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போனவை தான் இதன் மகிமைக்கு காரணமாம்.

இந்த பழம் எப்படி உங்கள் முகத்தை பொலிவுடன் வைக்கிறது என்பதை இனி அறிவோம்.

இளமையாக இருக்க

முகம் பார்க்க பொலிவாகவும், இளமையாகவும் இருக்க இந்த குறிப்பு பயன்படுகிறது. இதற்கு தேவையானவை…

தேன் 1 ஸ்பூன்

பால் 2 ஸ்பூன்

சப்போட்டா 1

செய்முறை :-

முதலில் சப்போட்டாவை நன்கு அரைத்து கொண்டு அதனுடன் தென் மற்றும் பால் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இந்த மாஸ்க்கை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 20 நிமிடத்திற்கு பிறகு முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும்.

இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பொடுகு தொல்லைக்கு

பலருக்கு மண்டையில் ஏற்படும் வறட்சியினால் பொடுகு தொல்லை அதிகமாக இருக்க கூடும். இதன் விளைவு முடி கொட்டுதல், வழுக்கை என படி படியாக பல விளைவுகளை தரும்.

இதனை போக்க இந்த குறிப்பு போதும்.

தேவையானவை…

சப்போட்டா விதைகள் 8

ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் சப்போட்டா விதைகளை தனியாக எடுத்து கொண்டு, நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இந்த பேஸ்டுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து தலையின் ஒவ்வொரு பகுதியில் தடவி, 20 நிமிடம் கழித்து தலையை அலசவும்.

இவ்வாறு செய்து வந்தால் பொடுகு தொல்லைகு பய் பய் சொல்லிடலாம்.

தங்கம் போல மின்ன

முகத்தில் உள்ள கருமைகள் நீங்கி தங்கம் போல பளபளவென மின்ன இந்த குறிப்பு போதும்.

இதற்கு தேவையானவை…

சப்போட்டா பழம் 1

தேன் 1 ஸ்பூன்

சர்க்கரை 1 ஸ்பூன்

செய்முறை :-

சப்போட்டாவை தோல் மற்றும் விதைகளை நீக்கி அரைத்து கொள்ளவும். பிறகு இந்த சாற்றுடன் தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பொலிவாக இருக்கலாம்.

சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும்..!

சப்போட்டாவை மேற்சொன்ன குறிப்புகள் போன்று பயன்படுத்தினால் முடி மற்றும் முகத்தின் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

அதே போன்று இதனை அப்படியே சாப்பிட்டால் உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் முக ஆரோக்கியமும் சேர்ந்து நலம் பெறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button