32.1 C
Chennai
Sunday, May 11, 2025
1 1
அழகு குறிப்புகள்

சுவையான தக்காளி பிரியாணி!…

தேவையானப்பொருட்கள்:

பாசுமதி அரிசி – 2 கப்,
தக்காளிக்காய், தக்காளிப்பழம், பச்சை மிளகாய் – தலா 2 (நறுக்கவும்),
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
பெரிய வெங்காயம் – ஒன்று,
பிரெட் ஸ்லைஸ் – 2,
முந்திரித் துண்டுகள் – 4,
சீரகம் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை – 3 டேபிள்ஸ்பூன்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

1 1

செய்முறை:

வெந்நீரில் தக்காளிப்பழத்தைப் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து, தோலை உரித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளிக்காயையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, 3 கப் நீர் விட்டு, அரிசியைக் களைந்து சேர்த்து… தக்காளி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். பிரெட் ஸ்லைஸ்களை துண்டுகளாக்கி வறுக்கவும். குக்கரில் ஆவி வெளியேறியதும், சாதத்துடன் முந்திரி, பிரெட் துண்டுகள் சேர்க்கவும். மல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய தயிர்ப்பச்சடி ஏற்றது.

Related posts

முகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை

nathan

தெரிஞ்சிக்கங்க… தயிரினால் தினசரி வாழ்வில் நாம் பெறும் பயன்கள்!

nathan

காஜல் பயன்படுத்தி வந்த கருவளையத்தை நீக்க!….

sangika

ஃபேஸ் மாஸ்க்

nathan

பளபளப்பான முகம் முதல் அழகான முடி வரை உஙக்ளுக்கு வேண்டுமென்றால் இத பயன்படுத்துங்க!…

sangika

பனிகாலத்தில் சரும பராமரிப்பு கட்டாயமானது கட்டாயம் இத படிங்க!….

sangika

கருவளையம் மறைய…

nathan

எளிதாக நம் முகத்தில் உள்ள பருக்களை விரட்டி அடிக்கலாம்

nathan

இங்க சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை ட்ரை பண்ணுங்க பாத வெடிப்பு நீங்கும்

nathan