சுவையான கேரட் பாதாம் கீர் !…

தேவையானப்பொருட்கள்:

கேரட் துருவல் – 2 கப்,
பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு – தலா 10,
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
பால் – 100 மி.லி.,
சர்க்கரை – 6 டீஸ்பூன்.

செய்முறை:

பாலை நன்றாகக் காய்ச்சிக் கொள்ளவும். பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் உரித்து முந்திரிப் பருப்பையும் ஊறவைத்து குங்குமப்பூ, ஏலக்காய் சேர்க்கவும். கேரட் துருவலைச் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். சர்க்கரை சேர்த்து, காய்ச்சிய பாலைக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்தலாம்.
குறிப்பு: குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமலும் அப்படியே குடிக்கலாம். வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு, இளநீருடன் பாதாம், முந்திரி, கேரட் அரைத்துக் கலந்து கொடுக்கலாம். எனர்ஜி குறையாமல் இருக்கும்.

Leave a Reply