அழகு குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும் யோகர்ட்டும்!…

யோகர்ட்

புதிதாக யோகார்ட் சாப்பிடத் துவங்குவோரும், நம்மைப் போன்ற மற்றவர்களுக்கும் யோகார்ட் பற்றிய ஒரு கருத்து இருக்கிறது.

 இவை இரண்டுக்கும் சில வேறுபாடுகள்உண்டு. அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

தயிரும் யோகர்ட்டும்

தயிருக்கும் யோகர்ட்டுக்கும் இடையே என்ன வித்தியாசம் என்றால், தயார் செய்யப்படும் முறைகள், பாக்டீரியாக்களின் அளவுகள், பாலின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது.

curt

வகைகள்

சமீப காலங்களில் எடை குறைப்பது, உடல் பருமனுக்காக சிகிச்சை போன்றவற்றில் யோகர்ட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

மார்க்கெட்டுகளில் மிக எளிதாகவும் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. அதிலும் பல்வேறு வகையான யோகார்ட்டுகள் கிடைக்கின்றன.

அதில் மிகவும் பிரபலமானதும் எல்லோராலும் விரும்பப்படுவது எதுவெனில் கிரேக் யோகார்ட் தான்.

பெரும்பாலாக டயட்டீஷியன்கள் இந்த கிரேக்க யோகர்ட்டையே பரிந்துரையும் செய்கிறார்கள்.

புரத அளவுகள்

பாக்டீரியாக்களின் அளவைப் பொறுத்து மட்டுமே நாம் யோகர்ட்டைத் தேர்வு செய்வதற்கான மிக முக்கிய காரணம் வேறு சிலவும் உண்டு.

குறிப்பாக, இரண்டிற்குமான வித்தியாசம் என்பது அதிலிருந்து நமக்குக் கிடைக்கின்ற புரதச்சத்துக்களின் அளவு தான் முக்கியம்.

ஒரு மீடியம் சைஸ் பௌல் தயிரின் மூலம் நமக்கு 3-4 கிராம் அளவு புரதம் கிடைக்கும். அதே அளவுள்ள கிரேக் யோகர்ட்டில் 8 முதல் 10 கிராம் அளவுக்கு புரதச்சத்து கிடைக்கிறது.

தசை இறுக்கம்

உங்களுக்கு ஒன்று தெரியுமா? உடற்பயிற்சியின் போது பொதுவாக தசைகள் அயற்சி அடையும். அதுபோன்ற தசை இறுக்கம் மற்றும் அழுத்தங்களைக் குறைக்கும் பணியை யோகர்ட் செய்யும்.

வீட்டிலேயே எப்படி செய்யலாம்?

கடைகளில் ரெடிமேடாக யோகர்ட் வாங்கும்போது மாத பட்ஜெட்டில் கொஞ்சம் அடி வாங்கும்தான். தயிரைக் காட்டிலும் யோகர்ட் கொஞ்சம் விலை அதிகம் தான்.

அதனால் வீட்டிலேயே செய்து பயன்படுத்துவது கூடுதல் சுகாரத்துடனும் இருக்கும்.

விலையும் கொஞ்சம் குறைவாக இருக்கும். வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

செய்முறை

உங்களுக்கு எந்த அளவு வேண்டுமோ அந்த அளவிற்குப் பால் எடுத்து கொதிக்க வைத்து எதில் கண்ணா பௌல் அல்லது பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

100 – 105 பாரன்ஹீட் அளவு வெப்பநிலைக்கு வரும்வரை குளிரவிடுங்கள்.

பாலாடை மேலே நன்கு படியும்வரை காத்திருக்க வேண்டும்.

பின்பு அதில் வழக்கமாக தயிர் உறைய வைப்பது போன்று, இரண்டு ஸ்பூன் அளவுக்கு யோகர்ட் (வீட்டில் தயாரித்ததோ அல்லது கடையில் வா்ஙிகயதோ) சேர்த்து மெதுவாகக் கலக்குங்கள்.

அதன்மேல் உள்ள ஆடையை தூக்கி எறிந்துவிட வேண்டாம்.

வெதுவெப்பான தண்ணீரில் இந்த உறை ஊற்றிய கலவையை குறைந்தது 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை (இரவு முழுவதும்) வைத்திருக்க வேண்டும்.

காலையில் எடுத்து, அதன்மேல் தேங்கியிருக்கும் அதிகப்படியான நீரை மட்டும் வெளியேற்றி விடுங்கள்.

பயன்படுத்துவதற்கு 4 மணி நேரத்திற்கும் முன்பாக ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.

நான்கு முதல் ஐந்து நாட்கள் வரையிலும் இந்த யோகர்ட்டைப் பயன்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button