ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்வீட்டுக்குறிப்புக்கள்

முக்கியமான அபாயகரமான நோய்க்கு ஏசி தான் காரணமாக இருக்கிறது!

ஒரு காலத்தில் வீடு நிறைய ஜன்னல்கள், முற்றம் என காற்று வீட்டுக்குள் நுழைவதற்காக எல்லா வழிகளையும் திறந்து வைத்து வாழ்ந்தார்கள் நம்முடைய முன்னோர்கள். ஆனால் இன்றைய தலைமுறையில் நாமோ கதவு, ஜன்னல் என்று எல்லாவற்றையும் அடைத்துவிட்டு ரூமுக்குள் ஏசியைப் போட்டுக் கொண்டு உறங்குகிறோம்.

அதனால் நமக்கு ஏராளமான உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்பது பற்றி நாம் அறிவதில்லை.

அதைவிட மிக முக்கியமான அபாயகரமான நோய் ஒன்றுக்கு இந்த ஏசி தான் காரணமாக இருக்கிறது என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்

AC1

ஆக்சிஸன் குறைவு

ஆனால் பூட்டிய அறைக்குள் ஒருவர் 4 மணி நேரம் தூங்கினாலே அந்த அறையிலுள்ள ஆக்சிஜனின் அளவு முற்றிலுமாகக் குறைந்து விடும். பொதுவாக காற்றில் 21 சதவீதம் அளவுக்கு ஆக்சிஜன் நிறைந்திருக்கிறது.

இந்த அளவானது பூட்டிய அறைக்குள் ஒருவர் 4 மணி நேரத்தில் அது பத்து சதவீதத்துக்கும் கீழே குறைந்து விடும்.

நுரையீரல் திணறல்

ஆக்சிஜனின் அளவு காற்றில் குறைய ஆரம்பிக்கும் போது, நம்முடைய நுரையீரலால் ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவைச் சரியாக வைக்க முடியாமல் போகும்போது, நம்முடைய உடலை உயிர்ப்போடு வைத்திருக்க ஆக்சிஜனின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்லும்.

நம்முடைய சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையைச் செய்ய முற்படுகிறது.

தண்ணீரும் காற்றும்

நம்முடைய உடலில் உள்ள தண்ணீரில் இருக்கின்ற ஆக்சிஜழன எடுத்து உடலுக்குக் கொடுக்கும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. நாம் குடிப்பதற்குப் பயன்படுத்துகின்ற தண்ணீரில் இரண்டு மடங்கு ஆக்சிஜனும் ஒரு பங்கு நைட்ரஜனும் இருக்கின்றது.

இந்த தண்ணீருக்குள் இருந்து உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை சிறுநீரகம் பிரித்துக் கொடுக்கிறது.

அதனால் தான் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்று அழைக்கிறோம்.

சிறுநீரகத்தின் வேலை

சிறுநீரகம் இந்த வேலையைத் தொடர்ந்து செய்யத் தொடங்கியவுடன் அதுவரையிலும் செய்து கொண்டிருந்த வேலையான ரத்தத்தை வடிகட்டி, சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.

நம்முடைய உடலில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜனின் அளவு குறையத் தொடங்கியவுடன் அந்த கழிவுநீர் வெளியேறுவதற்காகத் தான் நமக்கு சிறுநீர் கழிக்கும் ஏற்படுகிறது.

மீண்டும் நம்முடைய உடலுக்கு புதிய ஆக்சிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதனால் தண்ணீர் தாகமும் சேர்ந்தே எடுக்கிறது.

இதனால் சிறுநீரகத்துக்கு அளவுக்கு அதிகமாக வேலைப்பளு கூடுகிறது.

யூரிக் அமிலம்

சிறுநீரகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரகத்தில் அழுக்கு சேர்வதுடன் ரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அசுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றன.

அதோடு மூட்டுகளிலும் யூரிக் அமிலம் படிவங்களாகச் சென்று தேங்கி வலியை உண்டாக்குகின்றன.

ரத்தத்தில் படிகின்ற இந்த படிவங்களின் தடிமன் அதிகரித்து ரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால் மூட்டுவலியும் ஏற்படுகிறது.

காற்றுத் தீட்டு

ஏசி அறையினில் இந்த இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்குகின்ற பொழுது தான் இத்தனை உடல் நலக் கோளாறுகளும் உண்டாகின்றன.

இதைத் தான் நம்முடைய மூதாதையர்கள் காற்றுத் தீட்டு என்று குறிப்பிட்டனர். இந்த பணியைத் தொடர்ந்து சிறுநீரகம் செய்து வருவதால், மிக விரைவிலேயே சிறுநீரகம் செயலிழந்து விடும் வாய்ப்பு ஏற்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button