மருத்துவ குறிப்புஆரோக்கியம்

புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது இஞ்சி!….

இஞ்சி மற்றும் மிளகாய் ஆகியவை மசாலா மற்றும் சுவையூட்டும் பொருட்களாக மட்டுமல்லாமல், புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இஞ்சி மற்றும் மிளகாயின் காமினேசன் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

இந்த மசால பொருட்கள் மூலம் நுரையீரல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டி வளர்ச்சிகள் ஏற்படாமலும் இவை தடுக்கின்றன.

 

ginger 1

மிளகாய், இஞ்சி மற்றும் 6-ஜிங்கர்சால் ஆகியவற்றின் கலவை புற்றுநோய் வராமல் தடுப்பதாகவும், 6-ஜிகனல், காப்சைசின் மிகுந்த வலுவான கலவையானது, உடலில் கட்டிகள் வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

மிளகாய் மற்றும் இஞ்சி கலவை புற்றுநோய்யை விரட்டும் மசாலாக்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, இஞ்சியில் குரோமியம், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் ஆகியவை உள்ளன. இது ஆரோக்கியமான மற்றும் முறையான இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது.

அமெரிக்க ஆய்வு!
கூடுதலாக, அமெரிக்க பிரகனன்சி அசோசியேஷன் (American Pregnancy Association ) இஞ்சியை பல்வேறு விதமாக சாப்பிட பரிந்துரைக்கிறது. தேனீர் உடன் இஞ்சியை கலந்து குடிப்பது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியை தடுக்கிறது. கொலம்பியா பல்கலைக்கலக மருத்துவர்கள், இஞ்சி மூச்சுக்குழாய் தசைகளை மென்மையாக்கி, நல்ல சுவாசத்திற்கு உதவுவதாக கூறியுள்ளனர்.

மிளகாயின் நற்குணங்களை தரக்கூடிய காப்டாசின் ( capsaicin) என்ற மிளகுத்தூள், மூளை வலி டிரான்ஸ்மிட்டரைத் தடுக்கிறது. இது தலைவலிகளை குறைப்பதோடு வீக்கத்தை தடுக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலம்!
ஒரு தேக்கரண்டி மிளகாயில், தினசரி தேவைகளுக்கு தேவையான 108 சதவிகிதம் வைட்டமின் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button