ஆரோக்கியம்ஃபேஷன்அலங்காரம்

இந்தக் கால கணவர்கள், தங்கள் மனைவிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோமா?

இரண்டு வெவ்வேறு மனிதர்கள், திருமணம் என்ற பந்தத்தில் கணவன், மனைவியாக இணைகிறார்கள். பொதுவாக, கணவர்கள், மனைவிகளிடம் என்னென்ன எதிர்பார்ப்பார்கள் என்பது தெரிந்த விஷயம்.

ஆனால், டிரெண்ட் மாறிக்கொண்டே இருக்கிறதே. ஸோ, இந்தக் கால கணவர்கள், தங்கள் மனைவிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோமா?

love

* ‘ஏங்க’, ‘என்னங்க’ மாதிரியான ஸோ கால்டு மரியாதை வார்த்தைகளை இந்தக் கால கணவர்கள் எதிர்பார்ப்பதே இல்லை.

இவற்றுக்குப் பதிலாக, வாடா, போடா, மாமா, மச்சான் என எப்படிக் கூப்பிட்டாலும், லவ்வபிளாக ரியாக்ட் பண்ணுகிறார்கள்.

டார்லு, மாம்ஸ், பப்பு மாதிரியான செல்லப் பெயர்களோடு மனைவி அழைப்பதை இந்தக் கால கணவர்கள் விரும்புகிறார்கள்..

* ஆஃபீஸில் நடக்கும் பாலிடிக்ஸ், அப்ரைசல், வேறு ஆஃபீஸ் மாறுவது, தன் உடன்பிறந்தவர்களின் பிரச்சனைகள் என்று தன்னைச் சார்ந்த அத்தனை விஷயங்களையும் மனைவியிடம் வெளிப்படையாகச் சொல்லி, அதற்கான தீர்வுகளையும் எதிர்பார்க்கிறார்கள் இன்றைய ஆண்கள்.

* சமூக வலைதளம், ஆஃபீஸ் என நிறையப் பெண் தோழிகள் இருந்தபோதும், தன்னை மனைவி நம்ப வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஆண்களிடம் இருக்கிறது.

அதேநேரம், மனைவி சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருப்பது பல ஆண்களுக்கும் டென்ஷன் ஏற்படுத்துகிறது.

* தாம்பத்யம் விஷயத்தில் தன் விருப்பம், தன் சுகம் போன்ற சுயநலங்கள் இன்றைய ஆண்களிடம் குறைந்துள்ளன.

அதனால், தாம்பத்யம் முடிந்ததும் தன் மனைவி சந்தோஷப்பட்டாளா என்பதை அவள் வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

ஸோ, உங்கள் விருப்பங்களை, அந்த நேரத்துக்குத் தக்க உணர்வுகளுடன் வெளிப்படுத்துங்கள் பெண்களே…

* நீ வீட்டைப் பார்த்துக்க; வேலைக்குப் போகவேண்டாம்’ என்று சொல்லும் பழக்கம் இன்றைய முக்கால்வாசி ஆண்களிடம் இல்லை. மனைவியும் தனக்கு உதவியாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட எல்லா ஆண்களிடமும் இருக்கிறது.

* தங்கள் மனைவியிடம் வெளிப்படையாக இருக்கும் ஆண்கள்கூட, தங்களுக்கென்று ஒரு ஸ்பேஸை மனைவி கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

* தாங்கள் பேசுவதை மனைவிகள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் ஒரு சில ஆண்களிடம் இருக்கிறது.

Related Articles

3 Comments

  1. நிம்மதி அதை தவிர வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது

  2. வீட்டுக்குள் வந்தால் நிம்மதியாக இருக்கணும் அது போதும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button