ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன!….

தலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும்? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ஒன்று என பல தலையணை பயன்படுத்தி உறங்குவார்கள். சிலருக்கு தலைக்கே இரண்டு தலையணை வைத்து படுத்தால் தான் உறக்கம் வரும்.

ஆனால், தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன என கூறப்படுகிறது….

pillow

தண்டுவடம்! தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது. கெட்டியான / கடுமையான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் தீய தாக்கங்கள் உண்டாகலாம்.

கழுத்து!தலையணை இல்லாமல் உறங்குவதால் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். வலியை குறைக்க முடியும்.

சீரமைப்பு!தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும். ஆனால், சிலருக்கு மருத்துவ நிலை காரணமாக தலையணை பயன்படுத்துவதாக கட்டாயமாக இருக்கும், அவர்கள் தலையணை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

முக சுருக்கங்கள்!தலையணை பயன்படுத்தாமல் உறங்கினால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகாது என கூறப்படுகிறது.

மெல்லிய தலையணை!நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும்.

அடர்த்தியான தலையணை!ஒருபக்கமாக படுத்து உறங்கும் நபர்களுக்கு அடர்த்தியான தலையணை சிறந்தது. இது தோள்பட்டை மற்றும் காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தி கொடுக்கும்.

தட்டையான தலையணை!குப்புறப்படுத்து உறங்கும் நபர்களுக்கு தட்டையான தலையணைகள் சிறந்தது.இது தலையின் நிலை அசௌகரியமாக உணராமல் இருக்க உதவும். மேலும், முதுகு, இடுப்பு வலி ஏற்படாமல் தடுக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button