ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

இதனால் நிச்சயம் நல்ல தூக்கம் கிடைக்கும்!….

உலகில் தூக்கமின்மை மிகவும் தீவிரமான பிரச்சனையாக உள்ளது. நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் டென்சன் போன்றவற்றால் பலர் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். அதுவும் அமெரிக்காவில் ஏராளமானோர் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதிலும் சுமார் 58% அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவதாக அமெரிக்க ஃபவுண்டேஷன் கூறுகிறது.

தூக்கமின்மை என்பது தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவது என்பதில்லை. தூக்க உணர்வே இல்லாமல் விழித்திருப்பார்கள். இந்த பிரச்சனையைத் தவிர்க்க, பலர் தூக்க மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தூக்க மாத்திரைகளை எடுக்கும் பழக்கத்தைக் கொண்டால், பின் அதுவே பழக்கமாகிவிடும்.

not sleep

தூக்கமின்மை பிரச்சனைக்கு அக்குபிரஷர் சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம். இக்கட்டுரையில் படுத்த உடனேயே தூங்க எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து நீங்கள் இன்று முயற்சித்துப் பாருங்கள். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…

ஷிமியன் புள்ளி

இந்த புள்ளி பாதத்தின் அடிப்பகுதியில் உள்ளது. தூக்கமின்மை பிரச்சனையை சந்திப்பவர்கள், படத்தில் காட்டப்பட்டவாறு குதிகால் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அது எந்த கால்களாக வேண்டுமானாலும், குதிகாலின் முனைப் பகுதியில் 1 நிமிடம் நன்கு அழுத்தம் கொடுக்கும் போது, தூக்கமின்மை பிரச்சனை நீங்கி, படுத்த உடனேயே தூங்கலாம்.

நிகுஅன் புள்ளி

இந்த புள்ளி கையின் மணிக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கும் போது, உடல் ரிலாக்ஸ் அடைந்து, விரைவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். அதற்கு கையின் மணிக்கட்டு பகுதியில், மூன்று விரல் இடைவெளி விட்டு, அவ்விடத்தில் பெருவிரலால் 1 நிமிடம் நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அன்மியன் புள்ளி

இந்த அழுத்த புள்ளியானது தலையில் உள்ளது. அதுவும் காதின் பின்புறத்தில் அமைந்துள்ளது. படத்தில் காட்டப்பட்டவாறு காதின் பின்புறத்தில் அழுத்தம் கொடுப்பதால், உடலில் உள்ள அழுத்தம் குறைந்து, உடல் ரிலாக்ஸ் அடைந்து, சீக்கிரம் தூக்கத்தைப் பெறச் செய்யும். முக்கியமாக அவ்விடத்தில் ஆள்காட்டி விரலால் 20 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஷென்மன் புள்ளி

இந்த புள்ளியும் கையின் மணிக்கட்டுப் பகுதியில் தான் அமைந்துள்ளது. அதுவும் மணிக்கட்டு பகுதிக்கு சற்று மேலேயும், சுண்டுவிரலுக்கு நேர் கீழேயும் இந்த புள்ளி உள்ளது. படத்தில காட்டப்பட்டவாறு அவ்விடத்தில் பெருவிரலால் அழுத்தம் கொடுக்கும் போது, உடலின் ஆற்றல் குறைந்து, விரைவில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.கீழே இரவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் இயற்கை பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சீமைச்சாமந்தி டீ

இரவில் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1 கப் சீமைச்சாமந்தி டீயைக் குடிப்பதால், மன அழுத்தம், பதற்றம் மற்றும் டென்சன் குறைந்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.

பாதாம் பால்

ஒரு கப் பாதாம் பாலை இரவில் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் குடிப்பதால், நல்ல தூக்கம் கிடைக்கும். இதற்கு அதில் உள்ள ஒமேகா-3 மற்றும் நார்ச்சத்து தான் காரணம். மேலும் இதில் உள்ள ட்ரிப்டோபேன் என்னும் அமினோ அமிலம், தூக்கத்தைப் பெற உதவும் ஹார்மோன் உற்பத்திக்கு உதவி தூக்கத்தைப் பெறச் செய்யும்.

பால்

இரவில் நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமானால், தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளம் வெதுவெதுப்பான பாலைக் குடியுங்கள். இதனால் நிச்சயம் நல்ல தூக்கம் கிடைக்கும்.

செர்ரி ஜூஸ்

செர்ரி பழத்தில் உள்ள மெலடோனின் என்னும் பொருள், உடலின் தூக்க சுழற்சியை ஒழுங்குப்படுத்தும். அதற்கு செர்ரிப் பழ ஜூஸை படுப்பதற்கு முன் குடியுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button